ஒதுக்கிய நயன்தாரா.. பாலிவுட் முன்னணி நடிகையை களமிறக்கி முகத்தில் கரியை பூசிய லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி

விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தற்போது வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். மேலும் இந்த படத்தை ஜேடி ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர்.

இவர்கள் ஏற்கனவே தல அஜித் மற்றும் விக்ரமை வைத்து உல்லாசம் என்ற படத்தையும், விசில் என்ற படத்தையும் இயக்கி உள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.

லெஜெண்ட் சரவணா அறிமுகமாகும் முதல் படமே கிட்டத்தட்ட முப்பது கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. பாடல்களுக்கும் பிரம்மாண்ட செட், ஷங்கர் பட ரேஞ்சுக்கு பாடல் லொகேஷன்கள் என பட்டையை கிளப்பி வருகிறார் அண்ணாச்சி.

மேலும் சரவணா அண்ணாச்சிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. ஆனால் யாருமே அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க முன் வரவில்லையாம்.

நம்ம ரேஞ்சு என்னவென்று காட்ட வேண்டும் என தற்போது பாலிவுட்டிலிருந்து ஊர்வசி ரவடுலா என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகையான இவரை அண்ணாச்சி படத்தில் ஒப்பந்தம் செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

urvashi-rautela-cinemapettai
urvashi-rautela-cinemapettai

மேலும் அண்ணாச்சி படத்தில் நடிக்காமல் விட்டு விட்டோமோ என தற்போது நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். பாலிவுட் நடிகைகள் மிகப் பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -