பாபநாசம் 2 படத்தில் கௌதமிக்கு பதிலாக இவரா? முன்னணி நடிகரின் மனைவியாச்சே!

மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது தமிழில் பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இதற்காக பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

திரிஷ்யம் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் பாபநாசம் என்ற பெயரில் அந்த படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும், மீனா கதாபாத்திரத்தில் கவுதமியும் நடித்தனர். மேலும் மகள்களாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் நடித்திருந்தனர்.

படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் த்ரிஷ்யம் 2 படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பாபநாசம் 2 படத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறதாம்.

ஆனால் தற்போது கமல்ஹாசன் மற்றும் கௌதமி ஆகிய இருவருக்கும் இடையில் உள்ள சொந்த பிரச்சனை காரணமாக பாபநாசம் 2 படத்தில் ஹீரோயினை மாற்றிவிடலாம் என யோசித்து வருகிறார்களாம். அந்தவகையில் முதல் சாய்ஸ் ஆக இருப்பது நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா தான் என்கிறார்கள்.

jyothika-cinemapettai
jyothika-cinemapettai

சமீபகாலமாக ஜோதிகா தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை செய்து வருவதால் பாபநாசம் 2 படத்திற்கு பொருத்தமாக இருப்பாராம். மேலும் த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்த மீனாவையே இந்த படத்திலும் நடிக்க வைக்கலாமா எனவும் பேசி வருகிறார்களாம்.

இதுகுறித்து கமலஹாசன் மற்றும் கௌதமி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே பாபநாசம் 2 படத்தின் மாற்றங்களைப் பற்றி யோசிக்க முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் தொழில் வேறு, சொந்தப் பிரச்சனை வேறு என்பதால் கௌதமியே இந்த படத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -