ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விட்ட குறை தொட்ட குறை.. பழைய காதலை மீண்டும் புதுப்பித்த கில்லாடி நடிகை

Gossip: குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட படங்களில் நடித்த அந்த நடிகை திடீரென ஹீரோயின் அவதாரம் எடுத்தார். அதுவும் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகருடன் அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இவருடைய அம்மாவும் ஒரு நடிகை என்பதால் சினிமாவில் எப்படி பிழைக்க வேண்டும் என்ற தந்திரம் நடிகைக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனாலயே வாய்ப்புகளுக்காக இயக்குனர்கள் ஹீரோக்கள் என அனைவரிடமும் இவர் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தார்.

அதன் பலனாக நடிகை பல வருடங்கள் சினிமாவில் கொடிகட்டி பறந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கான மவுசு குறைந்த நிலையில் தமாஷ் நடிகர் ஒருவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கினார்.

பழைய காதலை புதுப்பித்த நடிகை

அதேபோல் நடிகைக்கு தனிப்பட்ட முறையில் வந்த ஒரு பிரச்சனையை முக்கிய புள்ளி ஒருவர் தீர்த்து வைத்தார். அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகும் அளவுக்கு வந்தது.

ஆனால் திருமணத்திற்கு மட்டும் அந்த பிரபலம் நோ சொல்லிவிட்டாராம். இதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் இருக்கிறது. அதனால் நடிகை சினிமாவுக்கு சம்பந்தமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

தற்போது நடிகையின் வாழ்க்கையில் ஒரு துயர சம்பவம் நடந்தது. அதனால் மன வருத்தத்தில் இருந்த நடிகை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகிறார். அதேபோல் அந்த முக்கிய புள்ளியுடன் இருந்த தன்னுடைய பழைய காதலையும் புதுப்பித்து வருவதாக கோடம்பாக்க வட்டாரத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

Trending News