ஆண் நண்பருடன் பார்ட்டி பண்ணிய குத்துவிளக்கு.. கண்ணு மண்ணு தெரியாமல் குடித்துவிட்டு செய்த அலப்பறை

ஆறு மணி ஆயிடுச்சுன்னா என்னோட அவதாரமே வேற என திரை பிரபலங்கள் பலரும் பார்ட்டி வைத்து ஜாலி பண்ணி வருகின்றனர். அதில் பாப்புலர் நடிகைகள் தான் இதுபோல் பார்ட்டி, பப் போன்ற இடங்களில் அதிகம் தென்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வாய்ப்பு வேட்டை தான்.

மேலும் சின்னத்திரை நடிகைகள் கூட சனிக்கிழமை ஆகிவிட்டால் பார்ட்டி மூடுக்கு வந்து விடுகின்றனர். அதில் குடும்ப குத்து விளக்கு நடிகை ஒருவர் செய்த அலப்பறை தான் இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. பிரபல சேனலில் சக்கை போடு போட்டு வரும் சீரியலில் நாயகியாக நடிப்பவர்தான் இந்த குத்து விளக்கு.

சீரியலில் அடக்க ஒடுக்கமாக வரும் இவர் சில தினங்களுக்கு முன்பு ஆண் நண்பருடன் ஈசிஆர் பக்கம் காரில் சென்று இருக்கிறார். கழுத்து வரை குடித்திருந்த அவர் ஃபுல் போதையில் காரை ஓட்டிச் சென்று எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதி இருக்கிறார்.

Also read: திருமணமாகி ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகை.. கணவனுக்கு தெரிந்ததால் முற்றிய சண்டை

இதனால் காவல்துறை அந்த இடத்தை முற்றுகையிட்டு விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் நடிகை எங்க மேல எந்த தப்பும் கிடையாது. எதிர்ல வந்தவர் தான் எங்க கார்ல மோதிட்டாரு என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவர் குடித்திருப்பதை கண்டுபிடித்த காவல்துறையினர் தற்போது சில வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதுதான் இப்போது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரொம்பவும் அமைதியான பொண்ணு என நினைத்தால் இது இப்படி இருக்கே என பலரும் சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க சீரியலுக்கு நாயகியால் கெட்ட பெயர் வந்து விட்டது என்ற பரபரப்பும் ஓடிக் கொண்டிருக்கிறது.

Also read: காத்திருந்தவ புருஷன மயக்கிய நடிகை.. காதலனை மீட்க போராடும் காதலி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்