முரட்டு நடிகரை கழட்டி விட்ட உயர்ந்த நடிகை.. இளம் ஹீரோவுடன் டேட்டிங்

அந்த உயர்ந்த நடிகை அறிமுகமானது என்னவோ தமிழில் தான். ஆனால் அது அவருக்கு ஒர்க் அவுட் ஆகாத நிலையில் அக்கட தேசத்திற்கு சென்றார்.

அங்கு டாப் ஹீரோக்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி இடத்தையும் கைப்பற்றினார். அதை தொடர்ந்து மீண்டும் தமிழ் பக்கம் வந்த இவருக்கு மாஸ் ஹீரோவுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தது.

இதை வைத்து ஒரு ரவுண்டு வரலாம் என்று பார்த்தால் அதுவும் ஊத்திக் கொண்டது. அதனாலயே நடிகை பாலிவுட் பக்கம் தலை காட்டினார். அங்கு முரட்டு ஹீரோவை கண்ட்ரோலில் வைத்துக் கொண்டு சில பட வாய்ப்புகளையும் பிடித்தார்.

ஆனால் இப்போது நடிகை அவரை கழட்டி விட்டு விட்டாராம். புது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் நடித்த படங்களும் தோல்வியை தான் தழுவியது.

இனிமேலும் இந்த நடிகரை நம்பி பயனில்லை என அம்மணி ஆன்மீகம் பக்கம் திரும்பினார். ஆனால் இப்போது பார்த்தால் இளம் நடிகர் ஒருவருடன் அவர் டேட்டிங் செய்து வருகிறாராம்.

இருவரும் பொதுவெளியில் கேஷுவலாக வந்த போட்டோக்கள் லீக்கான நிலையில் நடிகை அமைதி காத்து வருகிறார். ஆனால் விரைவில் இவர்களுக்கு இடையே இருக்கும் உறவு வெட்ட வெளிச்சமாகி விடும் என்கிறது திரையுலக வட்டாரம்.

 

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்