நம்ப வச்சு ஏமாற்றிய நடிகர்.. தீராத மன அழுத்தத்தில் தவிக்கும் ஹீரோயின்

ஒரு படத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டாலே அந்த ஹீரோ, ஹீரோயின் படக்கென காதலில் விழுந்து விடுகிறார்கள். அப்படித்தான் அந்த அமுல் பேபி நடிகையும் சக நடிகரின் மேல் தீராத லவ்வில் இருந்திருக்கிறார்.

இருவரும் மீட்டிங், டேட்டிங் என ஊர் சுற்றி வந்தனர். இந்த செய்தியும் மீடியாவில் கிசுகிசுவாக வெளியானது. இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக கூட பேசப்பட்டது.

ஆனால் திடீரென நடிகை எதிலும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்தார். இப்போது பார்த்தால் நடிகை தன் காதலரை விட்டு பிரிந்து விட்டாராம். நடிகரைப் பற்றி தெரிய வந்த உண்மைதான் இதற்கு காரணம் என்கின்றனர்.

இதனால் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளான நடிகை நடிப்பை கூட ஓரங்கட்டி விட்டார். எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் அதில் கூட நாட்டமில்லாமல் இருக்கிறார்.

இதை அடுத்து நடிகையின் நட்பு வட்டாரம் அவரை எப்படியோ தேற்றி கொண்டு வந்திருக்கின்றனர். தற்போது காதல் தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ள நடிகை மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தயாராகி விட்டாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்