பிரபல நடிகையின் சீரியலை பாதியில் நிறுத்தும் சன் டிவி.. கேட்காத காதுக்கு ஹெட்செட்டு, பாய்சன் குடிக்க பல்செட்டு!

படங்களை விட சீரியல் மோகம் எப்போதுமே தாய்மார்களுக்கு அதிகம். சீரியல் போடும் நேரத்தில் வீட்டிற்குள் திருடன் வந்தால் கூட தெரியாத அளவுக்கு சீரியலில் மூழ்கியிருப்பார்கள். அந்த அளவுக்கு தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை தயாரித்து குடும்பங்களை கெடுத்து வருகின்றனர்.

குடும்பத்தை கெடுக்கும் சீரியல்களை தயாரிப்பதில் முதலிடம் எப்போதுமே சன் டிவிக்கு தான். வாரத்தில் 6 நாட்கள் சீரியல் தான். வாரத்தில் 6 நாட்களும் வீட்டில் கணவன் மனைவிக்குள் வெட்டு குத்து அளவிற்கு சென்று விடுகிறது பிரச்சனை.

தற்போது சினிமாவை மிஞ்சும் அளவுக்கு சீரியல்கள் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ஹிந்தி சீரியலில் தான் வெற்றி பெற்ற சீரியலின் தொடர்ச்சியை எடுப்பார்கள். தற்போது தமிழிலும் அந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற சித்தி சீரியலின் இரண்டாம் பாதம் சித்தி-2 என்ற பெயரில் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சித்தி சீரியலில் நாயகியாக நடித்த ராதிகாவே சித்தி2 சீரியலிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான சித்தி2 சீரியல் எதிர்பார்த்த டிஆர்பியை பெறவில்லையாம். இருந்தாலும் ராதிகாவின் பெயருக்காக அந்த சீரியலை ஓட்டி வருகிறார்களாம் சன் டிவியினர். இந்நிலையில் விரைவில் சித்தி 2 சீரியல் நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

chithi2-cinemapettai
chithi2-cinemapettai

இதுகுறித்து ராதிகாவிடம் நேரடியாக ஒரு ரசிகர் கேட்ட, இல்லவே இல்லை என மறுத்துள்ளார் ராதிகா. ஆனால் உப்பு சப்பு இல்லாமல் செல்லும் சித்தி 2 சீரியல் எப்போது வேண்டுமானாலும் கடையை மூடி விட்டு கிளம்பி விடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.