பிக்பாஸ் வீட்டில் அவரை பார்த்தாலே எரிச்சலா இருக்கு.. கொந்தளித்த பிரபல இளம் நடிகை

கடந்த மூன்று சீசன்களையும் வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய் டிவி நான்காவது பிக்பாஸ் சீசன் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இன்னும் சில தினங்களில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சீசன்களை போல விறுவிறுப்பாக இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

கடந்த 3 சீசன்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வந்தனர். ஆனால் இந்த சீசனில் ஒன்றுக்கும் உதவாத போட்டியாளர்களை களமிறக்கி ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளனர்.

பெரும்பாலும் விஜய் டிவி இந்த மாதிரி சர்ச்சையை நிகழ்ச்சிகளில் சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து நன்றாக செயல்படுவார்கள். ஆனால் இந்த முறை அதில் கோட்டை விட்டு விட்டார்கள் என்றே சொல்லலாம்.

ஆரம்பத்தில் இருந்து இதுவரை ஆரியின் பக்கம் மட்டுமே பிக்பாஸ் ரசிகர்களின் கவனம் இருந்து வருவது விஜய் டிவிக்கு பின்னடைவு கொடுத்துள்ளது. இருந்தாலும் கடைசி கட்டத்தில் ஏதாவது தில்லு முள்ளு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயமும் செய்யாமல் தாக்கு பிடித்தவர் ஷிவானி நாராயணன் தான். அவருக்கு இருக்கும் ஒரே வேலை பாலாஜி முருகதாஸ் என்ற சக போட்டியாளருடன் கடலை போடுவது தான் என சமூக வலைதளங்களில் கிழி கிழி என்று கிழித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அவரை கண்டபடி திட்டியது நினைவிருக்கலாம். இது குறித்து முந்தைய பிக்பாஸ் போட்டியாளரும் இளம் நடிகையுமான ஐஸ்வர்யா தத்தா, ஷிவானியை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது என கூறியுள்ளார். ஐஸ்வர்யா தத்தா முந்தைய பிக் பாஸ் போட்டியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

shivani-narayanan-cinemapettai
shivani-narayanan-cinemapettai

விதவிதமா போட்டோ போட்டா பத்தாது, போட்டியும் போட தெரியணும் என்கிறார்கள் ரசிகர்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்