விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார். பல ஹீரோக்களும் இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இவர் விக்ரம் திரைப்படத்தை அடுத்து தளபதி விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தை முடித்த கையோடு அவர் லோகேஷ் கனகராஜுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் அவர் விஜய்க்கு ஜோடியாக இல்லாமல் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த கேரக்டர் ஹீரோவுக்கு இணையாக மிகவும் பவர்ஃபுல்லாக இருந்ததால் சமந்தாவும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.
இந்த செய்தி கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவி வந்த நிலையில் லோகேஷ் சமந்தாவை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன என்று இப்போது தெரியவந்துள்ளது. அதாவது ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதாவது இந்திய அளவில் யார் மிகவும் பிரபலமாக இருக்கிறார் என்ற பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார். அதேபோன்று சமந்தா பாப்புலராக இருக்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
இதனால்தான் லோகேஷ் சமந்தாவை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதும் அவருடைய திட்டம். ஏனென்றால் விஜய், சமந்தா இருவரும் இணைந்து ஏற்கனவே மெர்சல், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் இவர்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அதனால்தான் லோகேஷ் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு சமந்தாவை செலக்ட் செய்திருக்கிறார்.