அமீர்கான் படத்தை தூக்கி எறிந்த விஜய் சேதுபதி.. வாய்ப்பை தட்டி தூக்கிய இளம் முன்னணி நடிகையின் கணவர்

சமீபத்தில் அமீர் கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி நீக்கப்பட்டது பெரிய சர்ச்சையை கிளப்பியது. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தனர். மேலும் பாலிவுட் சினிமாவில் இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதிசெய்தனர்.

அமீர் கான் தற்போது லால் சிங் சதா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

amirkhan-vijaysethupathi-cinemapettai
amirkhan-vijaysethupathi-cinemapettai

ஆனால் உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தினால் அமீர்கான் அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதியை நீக்கியதாக செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் சேதுபதி கால்ஷீட் பிரச்சனை காரணமாக தான் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என பிரச்சனைகள் ஓய்ந்த பிறகு தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்ததாக அந்த படத்தில் நடிப்பதற்காக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தாவின் காதல் கணவர் நாக சைதன்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

naga-chaitanya
naga-chaitanya

தெலுங்கு சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு இந்திப்பட வாய்ப்பு கிடைப்பதற்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் பலரும் தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு சென்று கொடிநாட்டி உள்ளனர். ஆனால் பெரும்பாலும் தமிழ் நடிகர்களுக்கு தான் அங்கு பிரச்சனை ஏற்படும்.

அதையும் தாண்டி சில தமிழ் நடிகர்கள் தற்போது பாலிவுட் சினிமாவில் ஆழமாக காலூன்ற ஆரம்பித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் மறுக்க முடியாத ஒன்று. லால் சிங் சதா படத்தில் விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மிக முக்கிய வேடமாம். அந்த கதாபாத்திரம் தனக்கு கிடைத்ததால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளாராம் நாக சைதன்யா.

- Advertisement -