கோடி ரூபாய் கொடுத்தாலும் இனிமேல் விஜய் படத்தில் நடிக்க மாட்டேன்.. மன விரக்தியில் பிரபல நடிகை

சமீபத்தில் வெளியான விஜய் படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் இனிமேல் வாழ்க்கையில் விஜய் படத்தில் நடிக்க மாட்டேன் என தன்னுடைய வட்டாரங்களில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. கமர்சியல் படம் என்பதால் பாடல்களுக்கும், காதல் காட்சிகளுக்கும் மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அந்தவகையில் கடைசியாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த இரண்டு கதாநாயகிகளுக்கும் கொஞ்சம் கூட முக்கியத்துவம் இல்லை. மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் நடித்திருந்தனர்.

மாளவிகா மோகனன் கதையின் திருப்புமுனையாக இருந்தாலும் பெரிய அளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அதைவிட மோசம் ஆண்ட்ரியா கதாபாத்திரம் தான். எதற்கு ஆண்ட்ரியா வந்தார், ஏன் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை போட்டார் என்பது தற்போது வரை ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்குப் பிறகு ஆண்ட்ரியா முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம். அதிலும் குறிப்பாக விஜய் படத்தில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக தன்னுடைய வட்டாரங்களில் தெரிவித்துவிட்டாராம்.

master-andrea-cinemapettai
master-andrea-cinemapettai

முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்கிறாராம். தயாரிப்பாளர்களோ, ஏரி உடைந்தால் மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என பொறுமையாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -