வடசென்னையில விட்டுட்டேன், இந்த வாட்டி மிஸ் ஆகாது.. வெற்றிமாறனை பிடித்து ரூட்டை மாற்றிய டாப் நடிகர்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் வடசென்னை படத்தில் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டு அடுத்த வெற்றிமாறன் படத்தில் எப்படியாவது சரிகட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கூட இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ள சூரியின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் விஜய் சேதுபதி. முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க இருந்த நிலையில் பின் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த படத்தில் இருந்து விலக விஜய் சேதுபதி இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

வெற்றிமாறன் படங்களில் ஒரு கதாபாத்திரம் நடித்தால் கூட அவர்களுக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும். அந்த வகையில் வட சென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தை மிஸ்செய்த விஜய்சேதுபதி விடுதலை படத்தில் கிடைத்த கதாபாத்திரத்தின் மூலம் வட்டியும் முதலுமாக நல்ல நடிப்பைக் கொடுத்து மார்க்கெட்டை உயர்த்திட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் விடுதலை படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என இப்போதே கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

vetrimaaran-vijay-sethupathi-cinemapettai
vetrimaaran-vijay-sethupathi-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்