
இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் மீது நடிகர் ஒருவர் நீண்ட நாட்களாக விருப்பம் வைத்திருந்ததாகவும், திருமணத்திற்குப் பிறகும் அவரை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என நினைத்ததாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.
உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அழகின் சிற்பமாக வலம் வந்தவர் தென்னிந்திய சினிமா முதல் ஹிந்தி சினிமா வரை அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தார்.
சினிமா கேரியர் நன்றாக சென்று கொண்டிருந்த போதும் பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டார். குழந்தை பிறந்த பிறகு நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
திருமணத்திற்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மாட்டார் என்று கூறியவர்களுக்கு மத்தியில் பிரபல நடிகருடன் இணைந்து முத்தக்காட்சி, படுக்கை அறை காட்சி போன்றவற்றில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஐஸ்வர்யா ராயை யாருக்குத்தான் பிடிக்காது. அந்த வகையில் ஹிந்தி சினிமாவில் ரொமான்டிக் நாயகனாக வலம் வரும் இம்ரான் ஹஸ்மி என்ற நடிகர் ஐஸ்வர்யா ராய் மீது ஏகப்பட்ட காதல் வைத்திருந்தாராம். எப்படியாவது ஐஸ்வர்யாராயை காதல் வலையில் வீழ்த்திவிட வேண்டுமென கங்கணம் கட்டி சுற்றி வருவாராம்.
அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு பிறகும் அவரது காதல் ஆசை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் சமீபத்திய பேட்டி ஒன்றில், அபிஷேக் பச்சனிடமிருந்து எதை திருட ஆசைப்படுகிறீர்கள்? என தொகுப்பாளர் கேட்டதற்கு, ஐஸ்வர்யா ராயை தான் என தெரிவித்துள்ளார். இதிலிருந்தே ஐஸ்வர்யாராய் மீது அவருக்கு எவ்வளவு வெறி இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது என பத்திரிகைகளில் பரபரப்பாக எழுத ஆரம்பித்துவிட்டனர்.
