ஹிந்தியில் ரீமேக் ஆகும் லோகேஷின் சூப்பர் ஹிட் படம்.. இயக்கப் போகும் பிரபல நடிகர்

லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் தற்போது லோகேஷின் இயக்கத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற கைதி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்று இயக்குனருக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தை பாலிவுட் நடிகர் அஜய் தேவன் ஹிந்தியில் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அவர் இதற்கு முன்பு ஹிந்தியில் அவரின் நடிப்பில் வெளிவந்த மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் அவர் நான்காவதாக இயக்கும் திரைப்படம் இது. போலா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அஜய் தேவகன், கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவருடன் இணைந்து நடிகை தபு, நரேன் நடித்த கதாபாத்திரத்தில் போலீஸாக நடிக்கிறார். தற்போது விறுவிறுப்பாக படமாகி கொண்டிருக்கும் இந்த திரைப்படம் அடுத்த வருடத்தில் வெளியாக இருக்கிறது. முன்னதாக இந்த திரைப்படத்தை எடிட்டர் தர்மேந்திரா ஷர்மா தான் இயக்குவதாக இருந்தது.

ஆனால் சில பல காரணங்களால் தற்போது அஜய் தேவ்கன் இயக்கி கொண்டிருக்கிறார். தமிழில் அமோக வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்திற்கு பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அஜய் தேவகன் அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக இந்த படத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாராம்.