பூர்ணிமாவை பலி கிடாவாக ஆக்கிய மாயா.. நம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமான சூனியக்காரி

Bigg Boss 7: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் கமலஹாசன் மாயா மற்றும் பூர்ணிமாவை வெளுத்தெடுத்து விட்டார். ஆண்டவர் இதோடு விட்டிருக்கக் கூடாது, எல்லோ கார்டு கொடுத்து இருக்க வேண்டும் என்று பிக் பாஸ் ஆடியன்சுகள் கொந்தளிக்கும் அளவுக்கு இவர்கள் இருவரும் கடந்த வாரம் முழுக்க பிக் பாஸ் விதிமீறலை தொடர்ந்து செய்து வந்தது தான் இந்த வறுத்தெடுப்புக்கு முக்கிய காரணம்.

பூர்ணிமாவை பொறுத்த வரைக்கும் அர்ச்சனா உள்ளே செல்லும் வரை அவர் நன்றாக விளையாடிக் கொண்டிருப்பதாகவும், வெளியே நல்ல பெயர் இருக்கும் என்று தான் எதிர்பார்த்தார். ஆனால் அர்ச்சனா உள்ளே வந்த வாரம் அவருக்கு அதிகமான கைதட்டு கிடைத்ததோடு, தினேஷ் மக்களால் அதிகம் ரசிக்கப்படுகிறார் என்று கைதட்டுகள் மூலம் தெரிந்ததால் பூர்ணிமா இப்போது கொஞ்சம் ஜெர்க் ஆகி இருக்கிறார்.

Also Read:உல்லாசமா இருக்க பசங்கள ஏமாத்தி காச ஆட்டைய போடுவா.. பூர்ணிமாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய தோழி

தினேஷ் வந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டதிலிருந்தே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார். தொடர்ந்து ரெண்டு வாரம் கேப்டன் ஆகவும் இருந்துவிட்டார். தினேஷை சாதாரண போட்டியாளராக நினைத்து பூர்ணிமா அவரிடம் மோதி கடைசியாக மூக்கு உடைந்தது தான் மிச்சம். உண்மையில் பூர்ணிமா எந்த ஒரு உள்நோக்கத்துடனும் தினேஷை எதிர்க்கவில்லை.

பலி கிடா ஆகிய பூர்ணிமா

பூர்ணிமா முழுக்க முழுக்க மாயாவின் கை பாவையாக தான் இருக்கிறார். மாயா, பூர்ணிமாவிடம் தினேஷை பற்றி ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி அவரிடம் மோத விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் முதல் வாரம் தினேஷுக்கு ஆடியன்ஸ்களிடம் கைதட்டு அதிகமாக இருப்பதை பார்த்த மாயா அவரிடம் பம்மிக் கொண்டுதான் பேசுகிறார்.

தினேஷிடம் மட்டுமில்லை, உண்மையில் மாயா இந்த 50 நாட்களில் தனக்கு பிடிக்காத போட்டியாளர்களை பூர்ணிமா மூலம் தான் தாக்குகிறார். ஆனால் மாயா போட்டியாளர்களிடமும் சரி, பார்வையாளர்களிடமும் சரி மாயாவை விட பூர்ணிமா தான் எல்லாத்திற்குமே காரணம் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டார்.

மாயாவின் எந்த திட்டமும் தெரியாமல் பூர்ணிமா அவரிடம் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார். பூர்ணிமாவை நாமினேட் செய்தது கூட, மற்றவர்களின் கண்துடைப்புக்கு தான் என்பது போல் பூர்ணிமா நினைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் பூர்ணிமா மூலம் மற்ற போட்டியாளர்களை கவிழ்த்து விட்டு, கடைசியில் பூர்ணிமாவின் ஆட்டத்தை கலைப்பது தான் மாயாவின் ஐடியா.

Also Read:குழம்பிய குட்டையில் மீன் பிடித்த பிக்பாஸ்.. வைல்ட் கார்ட் பத்த வச்ச நெருப்பால் ஆட்டம் கண்ட மாயா மாஃபியா

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்