தொடர்ந்து 3 தோல்விப் படங்களை கொடுத்த விஜய் பட நடிகை.. மளமளவென சரியும் மார்க்கெட்

சில நடிகைகள் வந்த புதிதிலேயே பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்து அவர்களது மார்க்கெட் உச்சத்திற்கு செல்கிறது. ஆனால் சில சமயங்களில் அவர்களது படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்ததால் மளமளவென மார்க்கெட் சரிந்து விடுகிறது. அதே நிலைமை தற்போது விஜய் பட நடிகைக்கும் நேர்ந்துள்ளது.

தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து சில படங்களில் நடித்த பூஜா தமிழில் ஸ்கோப் இல்லாததால் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்தார். இதனால் இவருக்கு தெலுங்கில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

மேலும், பூஜா ஹெக்டே மிகக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. ஆனால் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதது போல் இவர் நடித்த மூன்று படங்களுமே தொடர்ந்து ப்ளாப் ஆனது.

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானது. இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதைதொடர்ந்து தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்திலும் பூஜா நடித்திருந்தார்.

இந்தப் படமும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் கடைசியாக ஆச்சார்யா படத்தில் முழு நம்பிக்கையும் வைத்திருந்தார் பூஜா ஹெக்டே. ஆனால் இப்படமும் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான மூன்று படங்களும் தோல்வியை சந்தித்ததால் அவரது மார்க்கெட் தற்போது குறைந்துள்ளது. இதனால் பூஜா ஹெக்டே உச்சகட்ட கவலையில் உள்ளார். தற்போது பெரிய ஹீரோக்கள் படங்களில் பூஜா ஹெக்டேவை தேர்வு செய்வதற்கு பல தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்கள். சம்பளத்தை குறைத்தால் மட்டுமே இனி அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பூஜா ஹெக்டே.