தமிழ் சினிமாவில் முதலிடத்தைப் பிடிக்க பூஜா ஹெக்டே போட்ட ஸ்கெட்ச்.. விட்டா நயன்தாராவை தூக்கி சாப்பிடுவாங்க போல!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அதிக வசூலை வாரி குவித்து வருகின்றன.

அதனாலேயே விஜய் படம் என்றால் பல தயாரிப்பாளர்களும் தயாரிப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். அதற்கு காரணம் விஜயின் சினிமா மார்க்கெட் தான்.

விஜய்யுடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என பல நடிகைகளும் கங்கனம் கட்டி வருகின்றனர். அதற்குக் காரணம் விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்து விட்டால் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைக்கும் நினைத்து வருகின்றனர்.

vijay-pooja-hegde
vijay-pooja-hegde

ஆனால் விஜய்யுடன் நடிப்பதற்கு பூஜா ஹெக்டே வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு பக்கம் குஷியாக இருந்த பூஜா ஹெக்டே ஏனென்றால் விஜய்யுடன் நடித்துவிட்டால் அதிகமான படவாய்ப்புகள் கிடைக்கும் என அவருக்கே தெரியும்.

ஆனால் பூஜா ஹெக்டே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க ஆசைப்பட்டு வருகிறார். அதாவது விஜய்யுடன் நடித்தால் பல பட வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், இந்த படத்திலேயே 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி விட வேண்டும் என நினைத்து வருகிறார்.

தளபதி 65 படத்தின் தயாரிப்பாளரிடம் இந்த படத்தில் தனக்கு 5 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளாராம். அதற்கு காரணம் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் வசூலை வாரி குவித்ததால் இந்த கண்டிஷன் போட்டுள்ளார்.

எப்படியாவது நயன்தாராவின் சம்பளத்தை தாண்டி, தமிழ் சினிமாவில் முதல் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதே இவரின் எண்ணமாக தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்