கர்ஜிக்கும் சிங்க கேடயம், ரத்தம் கேட்கும் வாள்.. மிரட்டலாக வெளிவந்த பொன்னியின் செல்வன் போஸ்டர்

மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஒரு வருட காலமாக மொத்த படப்பிடிப்பும் தடைபட்டது.

இந்நிலையில் மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஹைதராபாத்தில் ஒரு பெரிய செட் போட்டு பொன்னியின் செல்வன் பட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகளில் முக்கிய நடிகர்களான ஐஸ்வர்யா ராய், கார்த்திக், ஜெயம் ரவி போன்றோர் நடித்தனர்.

எவ்வளவு வேகமாக பொன்னியின் செல்வன் படத்தை முடித்துக் கொடுக்க முடியுமோ, அவ்வளவு வேகத்தில் முடிக்க நடிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இடையில் கொரானா ஒரு காட்டு காட்டாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என தினமும் சாமியை வேண்டிக் கொள்கிறார்களாம்.

பொன்னியின் செல்வன் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருவதால் படத்தை பற்றிய எந்த ஒரு ரகசியமும் கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது படக்குழு. முக்கியமாக நடிகர் நடிகைகள் போட்டிருக்கும் கெட்டப்.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளனர். அதில் முதல் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என புதிய போஸ்டருடன் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து மணிரத்னம் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ponniyin-selvan-title-look
ponniyin-selvan-title-look

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -