2ம் பாகத்தில் டல் அடிக்கும் பொன்னியின் செல்வன்.. சுதாரிக்காமல் கோட்டை விட்ட மணிரத்தினம்

மணிரத்தினம் படம் என்றாலே மிகப் பிரமாண்டமாக தான் இருக்கும். இவர் படங்களில் நடிப்பதற்கு முன்னணி ஹீரோக்கள் தவமிருந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வருடம் வெளிவந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் அமோக வரவேற்பு பெற்று மக்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றது.

இதற்கு முக்கிய காரணம் படத்தின் கதை என்றாலும் அதற்கு அதிக அளவில் உற்சாகத்துடன் பிரமோஷன் செய்து மக்களுக்கு புரியும் படியாக கதையை விளக்கியத்தான். இந்த வெற்றியை தொடர்ந்து இதனுடைய இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் கடைசியில் வெளிவர இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

Also read: பொன்னின் செல்வன் 2 ரிலீஸ் தேதியை லாக் செய்த மணிரத்தினம்.. ஜெயிலருக்கு பின் பிரம்மாண்ட வெளியீடு

இந்நிலையில் இது குறித்து இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. மேலும் முதல் பார்ட்டுக்கு செய்த பிரமோஷன் போல இப்பொழுது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது இதனுடைய இரண்டாம் பாகம். ஆனால் இப்பொழுது இந்த டீம் கொஞ்சம் சுணங்கியது என்று சொல்லலாம். ஏனென்றால் முதல் பாகத்துக்கு பிரமோஷன் செய்ததை போல் இப்பொழுது இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்த்த அளவில் எதுவும் செய்யவில்லை.

பொதுவாகவே ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்காக பெரிய அளவில் பிரமோஷன் செய்தால் மட்டுமே எளிதாக மக்களிடம் சென்றடையும். இப்படி இருக்கையில் தற்போது அசால்டாக இருப்பது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் டல் அடிக்க வைக்கிறது. ஆனால் இதற்கு முன்னர் ராஜமவுலி எடுத்த பாகுபலி இரண்டாம் பாகத்துக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

Also read: 12 வருடத்திற்கு முன்பு கிடைக்காத வரவேற்பு.. பொன்னியின் செல்வனைப் பார்த்து பொசுங்கிய பிரபலம்

அதற்கு காரணம் முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொல்ல வேண்டும் என்று ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டு இருந்ததால் பெரிய அளவு எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் இந்த விஷயத்தில் மணிரத்தினம் கொஞ்சம் சுதாகரிக்காமல் கோட்டை விட்டார் என்றே சொல்லலாம்.

இதனால் பாகுபலி 2 அளவிற்க்கு இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் சற்று குறைந்து இருக்கிறது. எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யும் மணிரத்தினம் இந்த ஒரு விஷயத்தை அசால்ட் ஆக எடுத்துக்கிட்டு தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் மக்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் இல்லாமல் இருக்கிறார்கள்.

Also read: மணிரத்னம் மீது வழக்கு.. பொன்னியின் செல்வன் 2 ரிலீஸாகும் நேரத்தில் சூழ்ச்சி

Next Story

- Advertisement -