மணிரத்னம் கடந்த பல மாதங்களாக பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியத்தை இயக்கி வருகிறார். கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்தினம் இணைந்து மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. ஏராளமான நட்சத்திரங்கள் இருப்பதால் இந்த திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்து நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.
தற்போது அதை அதிகரிக்கச் செய்யும் வகையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். அதில் தற்போது கார்த்தியின் கதாபாத்திரம் என்ன என்பதை குறித்த ஒரு போட்டோவை பட குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் கார்த்தி வந்தியத்தேவன் என்னும் இளவரசராக நடித்துள்ளார். ராஜ்ஜியம் இல்லாத ஒரு இளவரசன், ஒரு உளவாளியாக, துணிச்சலான சாகசக்காரராக மாறும் கதாபாத்திரம் தான் இந்த வந்தியத்தேவன். பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றிருக்கும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்த ஒரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.
அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தியின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
அதில் இளவரசரிக்கே உரித்தான தோரணையில் மிகவும் கம்பீரமாக கார்த்தி குதிரையில் அமர்ந்திருக்கிறார். இந்த போட்டோவுக்கு தற்போது அதிகமான லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது. இதேபோன்று விக்ரமின் ஆதித்ய கரிகாலன் கெட்டப்பும் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.