மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் பொன்னியின் செல்வன்.. பாகுபலி விட ஆயிரம் மடங்கு ஸ்பெஷல் ஏன் தெரியுமா?

மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது. ஆனால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு சற்று குறைவாகத்தான் காணப்பட்டது. இதை எப்படி மணிரத்தினம் பூர்த்தி செய்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

ஆனால் பாகுபலி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு கூடுதலாக இருந்தது. ஏனென்றால் முதல் பாகத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் தான் இரண்டாம் பாதியில் எடுக்கப்பட்டிருந்தது. ஆகையால் பாகுபலி அளவுக்கு பொன்னியின் செல்வன் 2 படம் இடம்பெருமா என கேள்வியும் எழுந்தது.

Also Read : சம்பாதிப்பதற்கு மட்டும் தான் தமிழ்நாடு.. சென்னையில் இருக்க கூடாது என மகனை தொந்தரவு செய்யும் பொன்னியின் செல்வன் நடிகர்

ஆனால் மணிரத்னம் தன்னுடைய மாஸ்டர் பீஸ் ஆக பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார். பாகுபலி படத்தின் மூலம் தான் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கலாம் என்ற எண்ணம் மணிரத்தினத்திற்கு வந்தது. ராஜமவுலி இவருக்கு முன்னுதாரணமாக இருந்தாலும் அவரையே ஓரம் கட்டி உள்ளார் மணிரத்னம்.

அதாவது பாகுபலி பொறுத்த வரையில் உண்மை மற்றும் கற்பனை இரண்டையும் இணைத்து படமாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமான நாவலாக இருக்கும் பொன்னியின் செல்வனை அழகாக கொடுத்திருக்கிறார் மணிரத்னம். மேலும் படத்திற்கான ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கனகச்சிதமாக தேர்வு செய்திருந்தார்.

Also Read : சோழ ராஜ்யத்தை யார் கைப்பற்றியது? சிலிர்க்க வைத்த மணிரத்தினம், பொன்னியின் செல்வன்-2 முழு விமர்சனம்

மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஏ ஆர் ரகுமானின் இசை தான். பல மொழிகளில் பிரம்மாண்ட படங்கள் வெளியாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தங்களுக்கு என்ற ஒரு அடையாளமாக மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி பாகுபலி விட ஆயிரம் மடங்கு பொன்னியின் செல்வன் படம் ஸ்பெஷல் ஆக உள்ளதாக ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை தெரிவிக்க விட்டு வருகிறார்கள். மேலும் வசூலிலும் பொன்னியின் செல்வன் படம் இப்போது பட்டையை கிளப்பி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக பொன்னியின் செல்வன் படத்தை கொடுத்ததற்காக மணிரத்தினத்திற்கு நன்றியை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Also Read : வம்சத்தை கருவறுக்க காத்திருந்த நந்தினி.. நேருக்கு நேர் சந்தித்த ஆதித்த கரிகாலன், மிரட்டிவிட்ட பொன்னியின் செல்வன் 2

- Advertisement -