பொன்னியின் செல்வனில் கம்மி சம்பளம் வாங்கிய 5 பேர்.. படம் முழுக்க வந்த ஜெயராமுக்கு இவ்வளவு தான் சம்பளமா!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி கோடி கணக்கில் வசூல் செய்தது. அதனை தொடர்ந்து தற்போது வரும் 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமாக இந்த படம் 500 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவானது. தற்போது இந்த படத்தில் நடித்த ஒரு சில முக்கிய கேரக்டர்களின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. இதில் 5 பேருக்கு ரொம்பவும் குறைவான சம்பளமே வழங்கப்பட்டு இருக்கிறது.

பிரபு: நடிகர் பிரபு இந்த படத்தில் அநிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதாவது சோழ நாட்டிற்கும், சோழ இளவரசன் அருண் மொழி வர்மருக்கும் முக்கியமான ஆலோசனைகளை வழங்கும் கதாபாத்திரம் இது. மணிமுடி வழங்கும் காட்சியில் பிரபுவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்தில் நடிப்பதற்கு பிரபுவுக்கு 1.5 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.

Also Read:ஆஸ்கருக்காக படத்தை எடுக்கல.. சைடு கேப்பில் பிரம்மாண்ட இயக்குனரை குத்தி காட்டிய மணிரத்தினம்

பிரகாஷ்ராஜ்: பொன்னியின் செல்வன் மொத்த கதையும் பிரகாஷ்ராஜ் ஏற்று நடித்த சுந்தர சோழரை மையப்படுத்தி தான் இருக்கும். ஆதித்ய கரிகாலன், குந்தவை மற்றும் அருண்மொழி வர்மனின் அப்பாவான சுந்தரசோழருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அடுத்து மன்னனாக யார் முடி சூடுவார் என்பது தான் கதை. இதில் நடிக்க பிரகாஷ்ராஜுக்கு 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஐஸ்வர்யா லட்சுமி: சமுத்திரகுமாரி என்னும் பூங்குழலி பொன்னியின் செல்வனில் வரும் கற்பனை கதாபாத்திரம். இதில் படகோட்டி பெண்ணாக நடித்து இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, சோழ இளவரசன் அருண்மொழி வர்மனை ஒருதலையாக காதலிப்பது போல காட்டப்பட்டிருக்கும். இந்த படத்தில் நடிப்பதற்கு ஐஸ்வர்யா லட்சுமிக்கு 1.5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Also Read:2ம் பாகத்தில் டல் அடிக்கும் பொன்னியின் செல்வன்.. சுதாரிக்காமல் கோட்டை விட்ட மணிரத்தினம்

ஜெயராம்: மலையாள சூப்பர் ஸ்டார் ஜெயராம் இந்த படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பியாக நடித்திருப்பார். பொன்னியின் செல்வனில் இது கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும், கதைக்கு அதிக சுவாரஸ்யம் ஏற்றும் கேரக்டர். படம் முழுக்க பயணிக்கும் ஜெயராமுக்கு மொத்த சம்பளமாக 1 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சோபிதா துலிபாலா: பொன்னியின் செல்வனில் சோபிதா வானதி கேரக்டரில் நடித்திருப்பார். வானதி கொடும்பளூர் இளவரசியாகவும், சோழ இளவரசி குந்தவையின் நெருங்கிய தோழியாகவும் நடித்திருப்பார். இவர்தான் அருண்மொழி வர்மனை திருமணம் செய்து கொள்வார். இந்த படத்தில் நடிப்பதற்காக சோபிதா துலிபாலாவுக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read:12 வருடத்திற்கு முன்பு கிடைக்காத வரவேற்பு.. பொன்னியின் செல்வனைப் பார்த்து பொசுங்கிய பிரபலம்

- Advertisement -