சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

முரட்டு போதையில் சீமான், உடையும் அரசியல் மார்க்கெட்.. வீடியோவை வைரலாக்கும் நெட்டிசன்கள்

Seeman: பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் அந்த பிரபலங்களுக்கு தனிமனித சுதந்திரம் என்பது கொஞ்சம் கம்மி தான். பல விஷயங்களை தியாகம் செய்தால்தான் அவர்கள் வெற்றி அடைய முடியும். அதிலும் அரசியல் என்று வந்துவிட்டால், எப்போ மாற்றுவார்கள் என எதிரணியில் இருப்பவர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு காத்திருப்பார்கள். இது தெரியாமல் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சிக்கிவிட்டார்.

சீமானின் மேடைப் பேச்சு மற்றும் அவருடைய கருத்துக்களுக்கு இளைஞர்களிடையே ஆதரவு இருக்கிறது. இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் ஏதோ ஒரு இடத்தில் சறுக்கலாகி, ஓட்டுக்கள் தேறுவது கிடையாது. சீமானும் பல வருடமாக வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அவர் செய்யும் சில வேலைகளால் சேர்த்து வைக்கும் பெயரும் சல்லி சல்லி ஆக உடைந்து விடுகிறது.

Also Read:இரவோடு இரவாக செந்தில் பாலாஜி கைது.. நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி, நடந்தது என்ன?

சீமானுக்கு ஏற்கனவே காலை சுற்றிய பாம்பு போல் திணறடித்துக் கொண்டிருக்கும் பிரச்சனை தான் நடிகை விஜயலட்சுமி உடன் இருந்த உறவு. இருவரும் காதலித்ததற்கும், ஒரே வீட்டில் வாழ்ந்ததற்கும் அந்த நடிகை எவ்வளவோ ஆதாரங்களை காட்டினாலும், அவரால் உறுதியாக நின்று போராட முடியவில்லை. இருந்தாலும் அவ்வப்போது வெளியில் வந்து சீமானின் பெயரை மொத்தமாய் அசிங்கப்படுத்தி விடுகிறார்.

கடந்த ஒரு மாதமாக இந்த பிரச்சனை தமிழகம் முழுவதும் காட்டு தீ போல் பரவிக் கொண்டிருந்தது. பெங்களூரு சென்ற விஜயலட்சுமி, வீடியோவுக்கு மேல் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார். இதே நேரத்தில் சீமானின் மற்றொரு வீடியோ நெட்டிசன்களால் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Also Read:ஆழமாக அரசியல் பேசும் மாமன்னன்.. கமலுடன் கூட்டணி போடுவாரா உதயநிதி!

சீமான் தன் கட்சியினருடன் மீடியாவுக்கு பேட்டி கொடுத்த அமர்ந்திருக்கிறார். ஆனால் அவரால் வாயை திறந்து கூட பேச முடியவில்லை. அந்த அளவுக்கு தன்னை மிஞ்சிய போதையில் சீமான் இருப்பது போல் தெரிகிறது. அவரின் அருகில் இருப்பவர்கள் மீடியாவை சமாளிக்க முடியாமல் திணறுவது அவர்கள் பார்வையிலேயே வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் சீமான் முழித்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் எதுவுமே சொல்லாமல் வணக்கம் என்று சொல்லிவிட்டு முடிக்கிறார். இந்த வீடியோ இப்போது பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது. சமூக பொறுப்பில் இருக்கும் சீமான் போன்ற ஒரு அரசியல்வாதி இப்படி நடந்து கொள்வது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read:உதயநிதியை பகடை காயாய் பயன்படுத்தும் சிவகார்த்திகேயன்.. நரியை மிஞ்சிய தந்திரம்

- Advertisement -

Trending News