கமலை மெண்டல் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்.. ஒரு சீட்டுக்காக கட்சியை அடகு வைத்தவர், கொந்தளித்த அரசியல் புள்ளி

Kamal: தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் அரசியல் களம் மிகுந்த பரபரப்பாக இருக்கிறது. கொளுத்தும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் கமல் தன்னுடைய கட்சி போட்டியிடாவிட்டாலும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அப்படி டி ஆர் பாலுவை ஆதரித்து பேசியபோது இவர் பாஜக நாக்பூரை தலைநகராக்க பார்க்கிறார்கள் என விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை கமலுக்கு மூளை பரிசோதனை செய்ய வேண்டும். அவர் சுயநினைவுடன் தான் இருக்கிறாரா? என மனநல மருத்துவமனைக்கு சென்று சோதிக்க வேண்டும்.

கமலை தாக்கி பேசிய அண்ணாமலை

இது எப்படி சாத்தியமாகும். நாக்பூரில் ஆர் எஸ் எஸ் அலுவலகம் இருப்பதால் அவர் இப்படி கூறுகிறார். இப்படி கமல் மட்டுமல்ல வேற யார் பேசினாலும் அவர்கள் மூளையை சோதிக்க வேண்டும்.

ஒரே ஒரு சீட்டுக்காக தன்னுடைய கட்சியை அடமானம் வைத்தவர் தான் கமல். அவர் எங்கள் கட்சியை பற்றி பேசுகிறாரா? திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

எப்படி இருந்தாலும் நாங்கள் தான் ஜெயிப்போம் என அவர் உறுதியாக கூறியுள்ளார். ஆனால் கமலை அவர் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்