வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஐஸ்வர்யாவின் நகைகளை மீட்ட போலீஸ்.. 4 ஆண்டுகளாக கூடவே இருந்து குழி பறித்த நபர்

தனுஷை விட்டு பிரிந்ததிலிருந்தே ஐஸ்வர்யா குறித்து பல சர்ச்சையான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிலும் அவர் தற்போது இயக்கி வரும் லால் சலாம் படப்பிடிப்பில் கடுமையாக நடந்து கொள்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அவர் சோசியல் மீடியாவில் வெளியிடும் போட்டோக்களுக்கும் ஏதாவது ஒரு எதிர்வினை கிளம்புகிறது.

இப்படி சர்ச்சை வட்டத்திற்குள் இருக்கும் ஐஸ்வர்யா சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டு லாக்கரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்படி அவரின் தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளின் மதிப்பே மூன்று கோடியை தாண்டுமாம்.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அதற்கான தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

Also read: சிவாஜி ராவை சூப்பர் ஸ்டாராக்கிய முதல் காதல்.. திருமணத்திற்கு முன் ஏற்பட்ட மறக்க முடியாத லவ் ஸ்டோரி

மேலும் ஐஸ்வர்யா தன் வீட்டில் இருக்கும் குறிப்பிட்ட சில நபர்களின் மேல் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதை எடுத்து போலீசாரும் சம்பந்தப்பட்டவர்களிடம் இது குறித்து தீவிரமாக விசாரித்து இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது நகைகளை ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி என்ற பெண் தான் திருடி இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

அதில் அவர் நான்கு ஆண்டுகளாக இந்த வேலையை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஐஸ்வர்யா தன் தங்கை சௌந்தர்யாவின் திருமணத்தின் போது இந்த நகைகளை பயன்படுத்திவிட்டு லாக்கரில் வைத்திருக்கிறார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் வரை அந்த லாக்கரை அவர் திறந்து பார்க்காமல் இருந்திருக்கிறார்.

Also read: அந்த காட்சியில் நடிக்க பயந்த ரஜினிகாந்த்.. பல வருடங்களுக்கு பின் ரகசியத்தை உடைத்த இயக்குனர்

அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த பணிப்பெண்ணும் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடி விற்று காசாக்கி இருக்கிறார். அந்த பணத்தில் அவர் சென்னையின் முக்கிய இடத்தில் ஒரு கோடி மதிப்பிற்கு சொத்தும் வாங்கி இருக்கிறார். இந்த திடுக்கிடும் விஷயங்கள் அனைத்தும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மேலும் அவரிடம் இருந்து 20 சவரன் நகைகள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஈஸ்வரியின் பண பரிவர்த்தனைகள் தொடர்பான விஷயங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த விவகாரம் திரை உலகில் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 4 ஆண்டுகளாக கூடவே இருந்து குழி பறித்த பணிப்பெண்ணின் நடவடிக்கைகளை ஐஸ்வர்யா எப்படி தெரிந்து கொள்ளாமல் இருந்தார் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also read: ரஜினி, விஜய் வெற்றி பெற்றால் தான் இருக்க முடியும்.. ஆனா கமல் அப்படி இல்லை, சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்

- Advertisement -

Trending News