கங்குலியால் கை தூக்கி விடப்பட்ட 5 வீரர்கள்.. இந்திய அணியில் ரீ-என்ட்ரி கொடுத்த ஜாம்பவான்கள்

இந்திய அணியில் மிகச் சிறந்த கேப்டன் என்றால் அது ஒரு சிலரை கூறலாம். அந்த வகையில் இந்திய அணியை அடுத்த அத்தியாயத்திற்கு எடுத்துச் சென்ற முக்கியமான கேப்டன்களில் ஒருவர் தான் “பெங்கால் டைகர்” என்று அனைவராலும் அழைக்கப்படும் தாதா கங்குலி. இந்திய அணியை வலுமிக்க அணியாக உருவாக்கியவர் என இவரைக் கூறலாம். சௌரவ் கங்குலி கால கட்டத்தில் இந்திய அணி பல வெற்றிகளை குவித்தது.

இவர் இந்திய அணியில் கேப்டனாக இருக்கும் போது பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் கிரிக்கெட் கேரியரை முன்னேறியுள்ளார். அந்த வகையில் கங்குலியால் மறுவாழ்வு பெற்று இந்திய அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்ட வீரர்களை இதில் காண்போம்.

ஒன்று – ஜாகிர் கான்: இந்திய அணி ஒரு காலத்தில் முழுநேர வேகப்பந்து வீச்சாளர்களுக்கு திணறிக்கொண்டு இருந்த காலகட்டம் அது. கங்குலி தலைமையில் ஜாகிர் கான் தேர்வு செய்த போது ஆரம்பத்தில் பல போட்டிகளில் சொதப்பினார். இருந்தாலும் விடாது அவரை கேப்டன் கங்குலி மோட்டிவேட் செய்து நிறைய போட்டிகளுக்கு வாய்ப்பு கொடுத்து, புதிய பந்தில் ஆக்ரோசமாக வீசும்படி அறிவுறுத்தி அவரை கை தூக்கி விட்டார்.பின் ஜாகிர் கான் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Zhahir-Cinemapettai.jpg
Zhahir-Cinemapettai.jpg

இரண்டு – வீரேந்திர சேவாக்: இவரைப் போன்று ஒரு அதிரடி வீரர் இந்திய அணி இன்று வரை கண்டதில்லை. ஆரம்பத்தில் சேவாக்கின் சராசரி 20 ,22 மட்டுமே இருந்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக களமிறங்குவார். அவரின் அதிரடி ஆட்டத்தை கவனித்த கேப்டன் கங்குலி அவரை ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக இறக்கி அவரின் திறமையை வெளிக்கொண்டு வந்தார். முதல் பந்திலிருந்து அதிரடி ஆட்டம் ஆடி பவுலர்களை அச்சுறுத்துவார். பாகிஸ்தான் அணியின் உமர் குள் கேரியரை இவர் கேள்விக்குறி ஆக்கினார்.

Shewag-Cinemapettai.jpg
Shewag-Cinemapettai.jpg

முன்று – ஹர்பஜன் சிங்: அனில் கும்ப்ளேவிற்கு அப்புறம் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது ஹர்பஜன் சிங். இவர் அணியில் வருவதும், போவதுமாய் இருந்தார். பின் இவரது திறமையை பார்த்த சவுரவ் கங்குலி, ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு அளித்தார். அந்தத் தொடரில் 3 போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை எடுத்து இமாலய சாதனையை படைத்தார் ஹர்பஜன்சிங். ஆஸ்திரேலிய அணியினரை தனி ஒருவனாய் சாய்த்து பின் இந்திய அணியில் நீங்காத இடம் பிடித்தார்.

Harbhajan-Cinemapettai-1.jpg
Harbhajan-Cinemapettai-1.jpg

நான்கு – யுவராஜ் சிங்: இவர் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமானார். ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் பின் பல போட்டிகளில் சொதப்பினார். இவருக்கும், கங்குலி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து அவரை சிறந்த ஆல்-ரவுண்டராக உருவாக்கினார். 2007, 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் ஆறு பாலுக்கு, 6 சிக்சர்களை அடித்து சாதனை படைத்தார். 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் போட்டிகளிலும் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். இவரும் முழுக்க முழுக்க ஒரு கங்குலி தயாரிப்புதான்.

Yuvraj-Cinemapettai.jpg
Yuvraj-Cinemapettai.jpg

ஐந்து – இர்பான் பதான்: கபில்தேவ்விற்கு அப்புறம் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் என பெயர் எடுத்தவர் இர்பான் பதான். இவரையும் அணிக்குள் கொண்டு வந்தது தாதா கங்குலி. இவரை பல நேரங்களில் ஒன் டவுன் இறங்கச் செய்து இவரது பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தி காட்டினார் கேப்டன் கங்குலி.

Irfan-Cinemapettai.jpg
Irfan-Cinemapettai.jpg