இறுதி வரை ரத்தம் சொட்ட சொட்ட களத்தில் போராடிய 6 கிரிக்கெட் வீரர்கள்.. அதில் இந்திய டீம்ல மட்டும் ரெண்டு பேரு!

கிரிக்கெட் போட்டிகளில் என்னதான் பாதுகாப்பாக விளையாடினாலும் சில நேரங்களில் துரதிஷ்டமாக வீரர்களுக்கு காயம் ஏற்படுவது உண்டு. இதில் சிலர் மரணம்கூட அடைந்திருக்கின்றனர். இதுவரை கிரிக்கெட் வரலாற்றில், மைதானத்தில் தனக்கு மிகப் பெரிய காயம் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் தன் அணிக்காக உயிரைக் கொடுத்து விளையாடிய வீரர்களை இதில் காண்போம்.

இம்ரான் கான்: 1992 ஆம் ஆண்டு இவர் தலைமையில் பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்றது. இவர் ஒரு ஆல்ரவுண்டர். அந்த தொடரில் இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அப்போது மருத்துவர்கள் இவரை உலக கோப்பை தொடரில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தினர். ஆனால் இவர் தொடர்ந்து “Pain killer”மாத்திரைகளை எடுத்துக் கொண்டு விளையாடினார். அரையிறுதிப் போட்டியில் 44 பந்துகளுக்கு 72 ரன்கள் குவித்து பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு நுழைய பெரிதும் உதவினார். அந்த தொடரில் உலக கோப்பையை வென்றது பாகிஸ்தான்.

Imran-Khan-Cinemapettai.jpg
Imran-Khan-Cinemapettai.jpg

மார்சல்: மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இவர். 1984 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில், பேட்டிங் செய்யும் போது இவருக்கு இரண்டு விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பந்துவீசி 2 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி கடைசி விக்கெட்டாக களமிறங்கி ஒற்றைக் கையில் பேட்டிங் செய்து எதிர்முனையில் நின்றவர் சதம் அடிப்பதற்கு பெரிதும் உதவி செய்தார்.

Marshall-Cinemapettai.jpg
Marshall-Cinemapettai.jpg

அனில் கும்ப்ளே: 2002 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங் செய்த அணில் கும்ப்ளேவின் தாடையில் பெரியதாக அடிபட்டு ரத்தம் சொட்டியது. அதை பொருட்படுத்தாமல் பந்துவீச்சில் தலையைச் சுற்றிக் கட்டு போட்டுக்கொண்டு மீண்டும் விளையாட வந்தார்.
முக்கியமான பிரைன் லாரா விக்கெட்டை கைப்பற்றினார்.

Anilkumble-Cinemapettai.jpg
Anilkumble-Cinemapettai.jpg

யுவராஜ் சிங்: 2011 உலக கோப்பையை இந்திய அணி வாங்குவதற்கு பெரிதும் உதவியாக இருந்தவர். அந்த தொடரின் போது யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை பெற்றார் யுவராஜ் சிங். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மைதானத்திலேயே “blood Vomit” எடுத்தார். அந்த போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

Yuvraj-Cinemapettai.jpg
Yuvraj-Cinemapettai.jpg

கிரேம் ஸ்மித்: தென்ஆப்பிரிக்க அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் ஸ்மித். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் இவருக்கு, ஜான்சன் வீசிய பந்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே பெவிலியன் திரும்பிய அவர் அணி தோல்வியின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் போது மீண்டும் கடைசி வீரராக களம் கண்டு போட்டியை சமன் செய்வதற்காக பெரிதும் போராடினார்.

Grame-smith-Cinemapettai.jpg
Grame-smith-Cinemapettai.jpg

ஷேன் வாட்சன்: 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தன் கால்களில் ரத்தம் வடிவதை கூட பொருட்படுத்தாமல் அணியின் வெற்றிக்காக கடைசி வரை களத்தில் நின்று போராடினார். 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். அந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Watson-Cinemapettai.jpg
Watson-Cinemapettai.jpg
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்