அனிருத்துடன் சரக்கு பார்ட்டியில் கும்மாளம் போடும் பிக்பாஸ் மாடல் அழகி.. இணையத்தில் லீக்கான புகைப்படம்

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் ஒருவரான ராப் பாடகரும் மருத்துவருமான ஐக்கி பெர்ரி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கிறார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபின், தன்னுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களின் குடும்பத்திற்கு சென்று அவர்களை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு கொண்டிருக்கிறார். அத்துடன் தற்போது முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத்துடன் நைட் பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட ஐக்கி பெர்ரி, மருத்துவப் படிப்பை படித்திருந்தாலும் அதைத் தன்னுடைய முதன்மை தொழிலாக வைத்துக் கொண்டு தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் தன்னுடைய சொந்த குரலில் நிறைய பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

ஆகையால் ஐக்கி பெர்ரிக்கு பிடித்ததை விட பிற நாட்டு மக்களுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதை நினைவில் கொண்டு அதற்கேற்றாற்போல் தன்னுடைய தலைமுடியையும் கருப்பு நிறத்தில் இருந்த கோல்டன் கலருக்கு மாற்றிக் கொண்டு தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி உள்ளார்.

iykki-berry-cinemapettai
iykki-berry-cinemapettai

அத்துடன் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். பெண்கள் இதை செய்யக்கூடாது. அந்த உடை போடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கக்கூடாது என்பதை பலமுறை ஐக்கி பெர்ரி மீடியாவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது சரக்கு பார்ட்டியில் ஐக்கி பெர்ரி அவருடைய நண்பர்கள் மற்றும் அனிருத்துடன் கும்மாளம் போட்டிருக்கும் புகைப்படம் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

மேலும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி இந்த வாரம் நிறைவடைய உள்ளதால், ஏற்கனவே எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வரிசையாக பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக மீண்டும் வந்து கொண்டிருப்பதால் ஐக்கி பெர்ரியும் விரைவில் வர உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்