Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரண்டு மிஸ் இந்தியா கதாநாயகிகளுடன் தாறுமாறு ரொமான்ஸ்.. லெஜெண்ட் சரவணனின் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தற்போது வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். மேலும் இந்த படத்தை ஜேடி ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர்.
இவர்கள் ஏற்கனவே தல அஜித் மற்றும் விக்ரமை வைத்து உல்லாசம் என்ற படத்தையும், விசில் என்ற படத்தையும் இயக்கி உள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.
லெஜெண்ட் சரவணா அறிமுகமாகும் முதல் படமே கிட்டத்தட்ட முப்பது கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு கதாநாயகியாக நயன்தாராவை அழைத்ததாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் தற்போது மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய ஈத்திகாதிவாரி நடிக்கின்றார்.

legend-savanan-cinemapettai
அவரைத் தவிர மற்றொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவடுலா இந்தப் படத்தில் லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடி போட உள்ளார். இந்நிலையில் லெஜண்ட் சரவணன் மற்றும் ஊர்வசி ரவடுலா இருவரும் மணலியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு,

legend-savanan-cinemapettai
அதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இந்தப்படத்தில் விவேக், விஜயகுமார், நாசர், பிரபு, காளி வெங்கட், மயில்சாமி, லதா, தம்பி ராமையா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

legend-savanan-cinemapettai
அதேபோல் இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் உருவாக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
