திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

தன்னுடைய அடையாளத்தையே மாற்றிக் கொண்ட டி ஆர்-இன் புகைப்படம்.. தோள் கொடுக்கும் சிம்பு!

தமிழ் சினிமாவில் 80-களில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை உடன் கொடி கட்டி பறந்தார் நடிகர் டி ராஜேந்தர், திடீரென்று  நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

அங்கு பரிசோதித்த  மருத்துவர்கள் வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு  உயர் சிகிச்சை தரவேண்டும்  என்ற அறிவுரையை வழங்கியதால், டி ராஜேந்தர் தற்போது அமெரிக்காவில் பிரபல மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

ஜூலை மாதம் சிகிச்சை முடிந்த பிறகு நலமுடன் சென்னை  திரும்ப உள்ளார். இன்னிலையில் சிம்பு தற்போது லண்டனில் மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும்  தன்னுடைய தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் டிஆர் ராஜேந்தர் உடன் டிஆர் மனைவி உஷா, சிம்பு உள்ளிட்டோரும் இணைந்த குடும்ப புகைப்படமாக இருக்கிறது.

இதில் டிஆர் உடைய அடையாளமாக பார்க்கப்படும் தாடியை அகற்றி,  உடல் மெலிந்து, நலிவுற்று காணப்படுகிறார். ஆனால் இந்த புகைப்படத்தில் தன்னுடைய தந்தைக்கு பதிலாக  குட்டி டிஆர் ஆகவே சிம்பு தெரிகிறார். சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அதைத்தொடர்ந்து கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிக்கிறார். தற்போது பத்து தல படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தன்னுடைய தந்தையின் சிகிச்சைக்காக அமெரிக்கா வந்திருக்கும் சிம்பு,  பத்து தல படத்திற்காக தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில் ஜூலை மாதத்தில் டி ராஜேந்தர் அவருக்கு முழு சிகிச்சையும் நிறைவு பெற்று நலமுடன் விரைவில் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்ப உள்ளார். அதன்பிறகே  சிம்பு, பத்து தல படத்தில் இணைவார். மேலும் சிம்பு  சென்னை வந்த பிறகுதான் வெந்து தணிந்தது காடு படத்திற்கான ஆடியோ லான்ச் நடக்கப்போகிறது.

simbu-TR-cinemapettai
simbu-TR-cinemapettai
- Advertisement -

Trending News