திருமண ஜோடிகளுக்கு வித்தியாசமான பரிசு அளித்த மயில்சாமி.. மத்திய அரசை நேரடியாக தாக்கிய சம்பவம்!

கடந்த 1982ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலின் நண்பனாக நடித்திருந்தவர் தான் காமெடி நடிகர் மயில்சாமி. ஆரம்ப காலத்தில் கூட்டத்தில் ஒருவராக ஜுனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்த மயில்சாமி தற்போது பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகராக மாறி தனது நடிப்பின் மூலம் மக்களை மகிழ்வித்து வருகிறார்.

இவ்வாறு குணச்சித்திரம், நகைச்சுவை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கூலாக நடித்து அசத்தும் மயில்சாமி சமீபத்தில் தனது நண்பர் ஒருவர் வீட்டில் நடைப்பெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளார். அங்கு மணமக்களுக்கு பெட்ரோலை திருமண பரிசாக கொடுத்துள்ளார்.

பெட்ரோல் நிறம்பிய அந்த கேனை மணமக்களுக்கு கொடுக்கும்போது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சிரிக்க அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து மயில்சாமி கூறியதாவது, “பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. அதனை நினைவுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியான பரிசை அளித்தேன்.

பொதுமக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கூறிய அவர், தமிழக அரசு 3 ரூபாய் பெட்ரோல் விலை குறைத்திருப்பதை வரவேற்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

mayil-swamy
mayil-swamy

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான மலேசியா டூ அம்னீசியா படத்தில் நடித்திருந்த மயில்சாமி, தற்போது லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர், தயாரித்து நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.