அக்டோபர் முதல் வாரத்தில் விடாமுயற்சி தொடங்குவது உறுதி.. மொத்தமா டிக்கெட் வாங்கிய பட குழு

விடாமுயற்சி எந்த முயற்சியும் இன்றி பல மாதங்களாக படம் தொடங்கப்படாமலேயே வெறும் பேச்சுவார்த்தையிலேயே இருந்து வருகிறது. இதைப்பற்றி அப்டேட் கேட்டு ரசிகர்கள் கூட இப்பொழுது கேட்காமல் இருந்து வருகிறார்கள். காரணம் இவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றுமாக இருப்பதால் நம்பிக்கை இல்லாமல் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அஜித்தும் இதைப் பற்றி வாய் திறக்காமல் அவர் வேலையை அமைதியாக செய்து வருகிறார். இதுவும் ஒரு புறம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். இப்படி இருக்க கடைசியாக துபாயில் படபிடிப்பு நடத்தப்படும் செப்டம்பர் 29 படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதையும் படக்குழு தற்பொழுது மாற்றிவிட்டது.

Also Read : ட்ரிம் செய்யப்பட்ட மீசை, தாடி.. விடாமுயற்சிக்காக ஸ்மார்ட்டாக மாறிய அஜித்தின் நியூ லுக்

தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக அக்டோபர் 2ஆம் தேதி அசர்பைஜான் என்ற ஒரு நாட்டில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்கான பட குழுக்கான டிக்கெட் போடப்பட்டுவிட்டது. தொடர்ந்து 40 நாட்கள் படபிடிப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. படத்தின் எடிட்டர் முதற் கொண்டு அழைத்து செல்கிறார்கள் இனிமேல் இந்த காரணத்தாலும் தாமதமாக கூடாது என்று.

பின்னர் சென்னையில் பத்து நாட்கள் படபிடிப்பு நடத்தும் முடித்து அதன் பின் துபாய் பாலைவனத்தில் மிகப்பெரிய சண்டை காட்சி ஒன்று படமாக இருக்கிறார்களாம். தொடர்ந்து 80 நாட்கள் அனைத்து வேலைகளையும் முடித்து படத்தை வெளியிட அஜித் கூறிவிட்டாராம். அதற்காக தற்பொழுது அஜித்தின் சென்னை வந்து சேர்ந்தால். ஆனால் அவரது உருவத்தை இன்னும் மாற்றவில்லை அது ரசிகர்களுக்கு ஒரு கேள்வி குறியாக இருக்கிறது.

Also Read : புள்ள பூச்சி எல்லாம் அஜித்துக்கு வில்லனா.? மீண்டும் மீண்டும் சொதப்பும் மகிழ் திருமேனி

இந்த படத்தில் திரிஷா நடிப்பது உறுதி ஆகிவிட்டது இன்னொரு ஹீரோயினாக ஹூமா குரேஷி, நடிக்கிறார். இதில் த்ரிஷா அஜித்திற்கு மனைவியாகவே நடிக்கிறார். அதனால் இந்த படத்தில் காதல் டூயட்டுகள் இருக்க வாய்ப்பில்லை. வில்லனாக சஞ்சய்தத் மற்றும் அர்ஜுன் தாஸ் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் தொடங்கினால் மட்டுமே ரசிகர்கள் இதை நம்புவார்கள் என்று தெரிகிறது. அந்த அளவிற்கு இந்த படம் சொதப்பி அனைத்து ரசிகர்களையும் கடுப்பாக்கி விட்டது. அதனால்யே இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது. இதையெல்லாம் மீறி இயக்குனர் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பை எப்படி அதிகரிக்க செய்யப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்