ருத்ரதாண்டவத்தை மக்கள் கொண்டாடி தீர்ப்பார்கள்.. சொன்னது வேற யாரும் இல்ல.. அந்த போராளி இயக்குனர்தான்

ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, கௌதம் வாசுதேவ் மேனன், ராதாரவி மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ருத்ரதாண்டவம். இப்படத்தினை மோகன்ஜி இயக்கியுள்ளார். இவருடைய முந்தைய திரைப்படமான திரௌபதி வணிக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ருத்ரதாண்டவம் பல சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் கடந்து நாளை (அக்டோபர் 1) வெளியாக உள்ளது. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் அவர்கள் ருத்ரதாண்டவம் திரைப்படத்தினை பாராட்டி இயக்குனருக்கு கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரு திரைப்பட கலைஞனாக என்னை எண்ணி இதை எழுதவில்லை மக்களில் ஒருவன் ஆகவே இதை எழுதுகிறேன்.

உங்களின் முந்தைய திரைப்படமான திரௌபதி பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தாலும், எனக்கு அத்திரைப்படம் அவ்வளவாக பிடிக்கவில்லை. ருத்ரதாண்டவம் திரைப்படத்தினை மக்கள் ரசிப்பதையும்,  பாராட்டுவதையும் பார்க்க நேர்ந்த பொழுது இப்படத்தினை பார்க்க வேண்டுமா என்று நினைத்து, பின்னர் இப்படத்தினை பார்த்தேன் முழு படத்தையும் பார்த்த பொழுது நான் அவ்வாறு எண்ணியற்காக வருந்துகிறேன்.

rudra-thandavam-release
rudra-thandavam-release

இன்றைய காலகட்டத்தில் மக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளையும், சிக்கல்களையும் தான் நீங்கள் காட்சிகளாக முன் வைக்கிறீர்கள். எப்படியாவது மக்கள் இப்படத்தினை பார்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் அதிகமாக பேசுவதை காண்கிறேன். இனி அது தேவையில்லை உங்கள் படைப்பு மக்களிடம் பேசிக்கொள்ளும்.

இப்படத்தின் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்களின் ருத்ரதாண்டவத்தை மக்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என நான் நம்புகிறேன்.  எவரும் பேசத் துணியாத கருத்துக்களை திரைப்படத்தின் வாயிலாக பல கோடி மக்களிடம் கொண்டு சென்ற உங்களுக்கும் திரைப்படக் குழுவினருக்கும் மக்களில் ஒருவனாக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்