பணத்திமிரால் அழிந்த 5 ஜாம்பவான்கள்.. மைக் டைசைனை மாற்றிய தலைக்கனம்

ஒருவனுடைய வாழ்நாளிலே போதும் என்று சொல்ல தோன்றாத இரண்டு, பணம் மற்றும் புகழ். இது ஓர் மனிதனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். ஆனால் அளவிற்கு மீறினால் அதுவும் வாழ்கையை அழித்து விடும். அதனை நிரூபித்தது பலரின் வாழ்க்கை. பணம், புகழ் இரண்டையும் வெகு சீக்கிரத்தில் இழந்த சில மனிதர்களை இங்கே காணலாம்.

மைக் டைசன் : உலக குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் ஒவ்வொரு போட்டியிலும் கோடி கோடியாய் சம்பாதித்தார். அவரை மிஞ்ச ஆள் இல்லை என்னும் அளவிற்கு பணமும் வலிமையும் பெற்றிருந்தார். ஆனால் கற்பழிப்பு, போதை பழக்கம், அளவற்ற குரோதம் போன்றவற்றால் சீக்கிரமே புகழ் மங்கி, தனது வாயாலேயே தான் ஒரு வேஸ்ட் என்று கூறும் அளவுக்கு வாழ்கையின் அடிமட்டத்திற்கு சென்றார்.

மைக்கல் ஜாக்சன்: பாப் இசை மன்னன் என்றால் அது மைக்கல் ஜாக்சன் தான். தனது இசையாலும் நடனத்தாலும் பல இளம் நெஞ்சங்களை கட்டிப்போட்டவர் டாலர்களில் குளித்தார். நீண்ட காலம் வாழ பணத்தை நீராய் செலவு செய்தார். அழகுக்காக பல அறுவை சிகிச்சைகளுக்கு பேர் போனவர். யார் கண்பட்டதோ, ஓரின சார்ச்சயில் சிக்கி, புகழ் கெட்டு சீக்கிரமே இறந்தும் போனார்.

டைகர் உட்ஸ்: கோல்ஃப் உலகின் முடி சூடா மன்னன், டைகர் உட்ஸ். உலக விளையாட்டு வீரர்களில் அதிக பணம் சம்பாதிப்பவர் என்ற பட்டத்தை பல வருடங்களாக தக்க வைத்தவர். ஆனால் பெண் மோகத்தால், மனைவியிடம் கையும் களவுமாக மாட்டி, பாதி சொத்தை ஜீவனாம்சமாக கொடுத்தார். அப்போதிருந்தே அவர் காணாமல் போனார்.

பில் கிளின்டன்: அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிகவும் அழகானவர் என்று புகழப்பட்டவர் கிளின்டன். ஜனாதிபதியாக சிறப்புடன் செயல்பட்டவர். மனைவி ஹிலாரியுடன் இனிமையாகவே வாழ்ந்தார், மோனிகா லெவின்ஸ்கி அவர் மீது பாலியல் குற்றம் சுமத்தப்படும் வரை. பின்னர் அவர் நிலை தாழ்ந்து போனது உலகமறியும்.

ஜேக் மா: அலிபாபா, அலிஎக்பிரஸ் போன்ற வர்த்தக உலகத்தை உருவாக்கியவர். பல இகாமர்ஸ் கம்பெனிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பவர். பணத்தின் அருமை தெரிந்தவர் என்றாலும் சீன அரசை எதிர்த்து பேசிய காரணத்தால் பல மாதங்களாக காணாமல் போனார். தற்போதும் இவரது இருப்பிடம் தெளிவாக சொல்லப்படவில்லை.

எனவே வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம், பணமும் புகழும் என்றும் நிலைக்காது. எப்படி வந்தததோ அப்படியே சீக்கிரம் செல்வதற்கும் வாய்ப்பு உண்டு. அதனால் அதிகம் ஆடாமல் இருக்க வேண்டும். இவர்களது வாழ்க்கை நமக்கு பாடம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்