சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ரிலீசுக்கு முன்,சென்சருக்கு பின் வெளிவந்த பத்து தல விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

சிம்புவின் நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் இந்த மாதம் 30 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க வந்த சிம்பு தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பல திரை பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

Also read: பத்து தலையில் வெளிவந்த 8 தலைகள்.. மணல் மாஃபியாவை அநியாயமாய் செய்யும் சிம்பு

இந்நிலையில் இப்படம் ரிலீசுக்கு முன்பே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. அந்த வகையில் பத்து தல திரைப்படம் தற்போது சென்சருக்கு சென்றுள்ளது. அப்போது படத்தை பார்த்த நடிகரும், தயாரிப்பாளருமான தனஞ்செயன் சிம்புவை ஆஹா ஓஹோ என புகழ்ந்து பாராட்டியுள்ளார். இப்படம் கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி திரைப்படத்தின் தழுவலாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றது போல் எடுக்கப்பட்டு இருப்பதால் நன்றாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளதால் நிச்சயம் இது அவர்களுக்கு நல்ல பெயரை கொடுக்கும் என்றும் இதுவரை சிம்புவை பார்க்காத ஒரு கேரக்டரில் பார்ப்பீர்கள் என்றும் கூறியுள்ளார். இதுவே பெரும் ஆர்வத்தை தூண்டி உள்ள நிலையில் சிம்புவின் நடிப்பும் வேற லெவலில் இருக்கிறதாம். அதிலும் இரண்டாம் பாதியில் இருக்கும் சஸ்பென்ஸ் யாராலும் யூகிக்க முடியாத வகையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also read: சத்தமில்லாமல் வளர்ந்து வரும் ஹீரோ.. சிம்பு இடத்திற்கு வந்த ஆபத்து

அந்த வகையில் சிம்புவுக்கு இப்படம் மிகப்பெரும் திருப்புமுனையாகவும் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் பெருமையாக கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது பத்து தல திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மீறிய வகையில் பிரமாதமாக இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே படத்தின் டிரெய்லரில் சிம்புவின் கதாபாத்திரம் படு மிரட்டலாக இருந்தது.

அதுவே பலரின் ஆர்வத்தையும் தூண்டிய நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த விமர்சனமும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. அந்த வகையில் மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் சிம்பு ஹாட்ரிக் வெற்றியை ருசிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: என்னால எத்தனை பேரு செத்தானு தெரியாது, எத்தன பேர வாழ்ந்தானு தெரியாது.. பதற வைத்த பத்து தல டீசர்

- Advertisement -

Trending News