நீங்க அந்த படம் பார்ப்பீங்களா? எனக் கேட்ட ரசிகர்.. பார்வதி கொடுத்த பதில்

தல அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். பார்த்தவுடனே பற்றிக்கொள்ளும் தோற்றத்தில் இருக்கும் இவருக்கு சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் ஏராளம்.

சமூக வலை தளத்தில் மட்டும் தான் இவருடைய ஆதிக்கம் போல. தமிழ் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆன நிலையிலும் இன்னமும் தனக்கென ஒரு இடம் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

இருந்தாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் அடுத்ததாக வைபவ் நடிப்பில் ஆலம்பனா என்ற படம் வெளியாக உள்ளது. பார்வதி அவ்வப்போது சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவதில் ஆர்வம் கொண்டவர்.

எல்லா ரசிகர்களும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தானே. அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் பார்வதியின் லைவ் பக்கத்தில் வந்து ஒரு மோசமான கேள்வியை கேட்டுள்ளார். இப்போதெல்லாம் அந்த மாதிரி கேள்வி கேட்கும் ரசிகர்களுக்கு நடிகைகள் பதிலடி கொடுத்து வருவதால் பார்வதியும் கண்டிப்பாக ஏதாவது திட்டுவார் என எதிர்பார்த்தனர்.

parvathy nair
parvathy nair

அந்த ரசிகர் நீங்க அந்த மாதிரி படம் பார்த்தீங்களா என கேட்டுள்ளார். அதை பார்த்து கோபப்படாத பார்வதி வெட்கப்பட்டுக்கொண்டே நோ என்று சொல்லி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். எதையாவது பேசி வம்பில் பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.