வெறும் ஒன்பது விரல்களுடன் விளையாடிய இந்திய அணி வீரர்.. தோனியின் வருகையால் கேரியரை இழந்த பரிதாபம்

கிரிக்கெட் விளையாடுவது மிகவும் கடினம், அதிலும் சில குறைகளோடு விளையாடுவது ரொம்பவே கஷ்டம். அந்த வகையில் முக்கியமான ஒரு பிரச்சனையோடு நம் இந்திய அணிக்காக விளையாடி ஓரளவு வெற்றியும் பெற்றார் அந்த வீரர்.

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் தான் மிகச்சிறிய வயதில் அறிமுகமானார். 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணிக்காக தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இவர் தனது 16வது வயதில் இந்திய அணிக்காக களம் இறங்கியவர்.

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்திய அணிக்காக மிகச்சிறிய வயதில் விளையாட வந்தவர் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல். இவரை அனைவரும் செல்லமாக “அன்சேவ் மேன்” என்பார்கள்.

விக்கெட் கீப்பர்களுக்கு, நயன் மோங்கியாவிற்கு பிறகு இந்திய அணியின் ஒரு பெரிய வெற்றிடம் இருந்தது. விஜய் தாகியா, சமீர் டீகே, அஜய் ரத்ரா, டீப் தாஸ் குப்தா, எம்எஸ்கே பிரசாத் போன்றவர்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். இந்திய அணி விக்கெட் கீப்பர்கள் அமையாமல் பெரிதும் துவண்டு போயிருந்தது.

கங்குலி தலைமையில் ராகுல் டிராவிட்டை கூட பார்ட் டைம் கீப்பராக பயன்படுத்தினர். அந்த காலகட்டத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக அறிமுகமானவர்தான் பார்த்திவ் படேல். இவர் தனது பதினேழாம் வயதில் 2002 ஆம் ஆண்டு முதல் தர டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.

ஆனால் தோனியின் வருகைக்குப் பிறகு இவரால் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை. இருப்பினும் உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் என அனைத்திலும் தனது திறமையை நிரூபித்து 2018 ஆம் ஆண்டு கடைசியாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்தார்.

Parthiv1-Cinemapettai.jpg
Parthiv1-Cinemapettai.jpg

சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு பார்த்திவ் படேல் அளித்த பேட்டியில் ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில்,அவர் தனது கைகளில் ஒன்பது விரல்கள் மட்டும் இருப்பதாகவும், சிறுவயதில் கதவுகளுக்கு இடையே தனது சுண்டுவிரல் மாட்டி துண்டாகியதாகவும் கூறியுள்ளார்.

கீப்பிங் செய்யும்போது அதில் டேப்பை சுற்றிக்கொண்டு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்றும் இந்திய அணிக்காக பணியாற்ற தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Parthiv-Cinemapettai.jpg
Parthiv-Cinemapettai.jpg
- Advertisement -