ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பார்த்திபனின் இரவின் நிழல் எப்படி இருக்கு.? ட்விட்டரில் அனல் பறக்கும் ப்ரிவியூ ஷோ விமர்சனம்

சவாலான கதைகளையும், புதுமையான விஷயங்களையும் திரைக்கதையில் புகுத்துவதில் கில்லாடியான பார்த்திபன் தற்போது ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அவர் இப்படி ஒரு புதுமையை செய்யப் போகிறார் என்றதுமே பலருக்கும் இந்த படத்தின் மீது ஒரு ஆர்வம் இருந்தது.

ஒரு சிலர் அது எப்படி முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினர். தற்போது அனைத்து கேள்விகளுக்கும் விடை கொடுக்கும் விதமாக இந்த திரைப்படம் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்த பலரும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வருகின்றனர்.

iravin-nizhal
iravin-nizhal

இந்த படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே 30 நிமிடங்களுக்கு இதன் மேக்கிங் வீடியோ காட்டப்பட்டிருக்கிறது. அதை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் வாயடைத்து போயிருக்கின்றனர். உண்மையில் இப்படி ஒரு புதுமையான விஷயத்தை நடத்திக் காட்டி இருக்கும் பார்த்திபனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

iravin-nizhal
iravin-nizhal

மேலும் படத்தை பார்த்த பலரும் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அனைத்து காட்சிகளும் மெய்சிலிர்க்க வைத்துள்ளதாக கூறுகின்றனர். படத்தை பார்க்கும்போதே அதில் கடுமையான உழைப்பை கொடுத்திருக்கும் டெக்னீசியன்களின் அர்ப்பணிப்பும் வியக்க வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

iravin-nizhal
iravin-nizhal

அந்த வகையில் இப்படி ஒரு முயற்சியை துணிந்து செயல்படுத்தி காட்டி இருக்கும் பார்த்திபன் மற்றும் அவருடைய டீமிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் இசையும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

iravin-nizhal
iravin-nizhal

இதனால் பலரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருக்கும் இந்த இரவின் நிழல் நிச்சயம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த திரைப்படம் குறித்த பேச்சுக்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

- Advertisement -

Trending News