நான் வியந்து பார்த்த இயக்குனர் இவர்தான்.. எவரெஸ்ட்டை போல் ஒப்பிட்டு புகழ்ந்து பேசிய பார்த்திபன்

பார்த்திபன் நடிப்பில் இயக்கத்தில் உருவான திரைப்படம் இரவின் நிழல். இரவின் நிழல் திரைப்படம் நான் லினர் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதாவது தளத்தில் எந்த ஒரு காட்சியையும் எடிட் செய்யாமல் ஒரே ஷாட்டில் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இரவின் நிழல் திரைப்படத்தை ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதற்கு பார்த்திபன் இரவின் நிழல் திரைப்படத்தை ஏ ஆர் ரஹ்மானை இசையமைக்க வைக்க காரணம் அவருக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இரவின் நிழல் திரைப்படம் உலக அளவில் சென்றடையும் என்பதற்காக மட்டும் தான் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க வைத்ததாக கூறினார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் பார்த்திபன் சூசகமாக தான் இரவின் நிழல் படத்தில் ஏ ஆர் ரஹ்மானை இசையமைக்க வைத்துள்ளார் என கூறி வந்தனர். மேலும் இரவின் நிழல் திரைப்படம் உலக அளவில் வெளியாகி இருப்பதாகவும் கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் எனவும் கூறியுள்ளார்.

தற்போது பேட்டியில் கலந்துகொண்ட பார்த்திபன் ரீசண்டா உங்களை கவர்ந்த இயக்குனர் யார் என கேட்கப்பட்டது. அதற்கு ஒருவர் கூற முடியாது ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் படம் தனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து எப்படி அவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எக்ஸ்பெக்டேஷன் எப்படி சமாளிக்கிறார் எனக்கெல்லாம் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சூர்யா மூவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்றால் எந்த கதையை வைத்து இயக்குவது என தெரியாமல் இருக்கும் ஆனால் லோகேஷ் கனகராஜ் அற்புதமாக படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் ஒரு புதுமையான படத்தை கூட 100 பேரை வைத்து இயக்கி விடலாம். ஆனால் கமர்ஷியலாக ஒரு படத்தை வெற்றி கொடுப்பது மிகவும் கடினம். லோகேஷ் கனகராஜ் அதனை அற்புதமாக செய்துள்ளார். மேலும் கமல்ஹாசன் போல் ஒரு மனிதனை இவ்வளவு பெரிய ஹிட் கொடுப்பதற்கு அவரை மலைபோல் பாராட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Next Story

- Advertisement -