காசு கொடுத்து செய்ய வைத்தாரா பார்த்திபன்.? சர்ச்சையை கிளப்பிய செருப்பு மாலை

பார்த்திபன் எடுத்துள்ள இரவின் நிழல் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் இப்படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்திபனை தன் வீட்டுக்கே அழைத்து பாராட்டியிருந்தார். இவ்வாறு பாராட்டுக்கள் மட்டுமின்றி சில கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

அதாவது இரவின் நிழல் படத்தில் சில மோசமான வார்த்தைகளும், பிட்டு துணி இல்லாத காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதனால் சிலர் இப்படத்தை பற்றி விமர்சித்து வந்தனர். இந்நிலையில் படங்களை விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் இரவின் நிழல் படத்தை பற்றி விமர்சித்து இருந்தார். அதாவது பார்த்திபன் இப்படத்தை நான் லீனியர் படமாக எடுத்துள்ளார்.

ஆனால் 2013 இல் ஈரானில் fish & cat என்ற படம் இது போன்று எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நான் தான் முதன் முறையாக இவ்வாறு படம் எடுத்துள்ளேன் என பார்த்திபன் பெருமைப்படுத்திக் கொள்வதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பார்த்திபன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் அவரின் உருவ பொம்மையில் செருப்பு மாலை அணிந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். இது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் வலிமை படம் வெளியானபோது ப்ளூ சட்டை மாறன் அஜீத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அஜித்துக்கு மிகப்பெரிய மாஸ் ஆடியன்ஸ் உள்ளனர். இதனால் ப்ளூ சட்டை மாறனை இணையத்தில் கடுமையாக திட்டி இருந்தனர். ஆனால் இந்த அளவுக்கு போகவில்லை. இதனால் தற்போது பார்த்திபன் தான் காசு கொடுத்து செருப்பு மாலை போட சொன்னதாக செய்திகள் பரவி வருகிறது.

பார்த்திபன் எதோ ஒரு உள்நோக்கம் வைத்து, இவ்வளவு கடின உழைப்பை தவறாக விமர்சித்துவிட்டதால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது. ஆனால் பார்த்திபன் தவறு செய்து விட்டால் உடனே மன்னிப்பு கேட்க கூடியவர். அண்மையில் இரவின் நிழல் இசை வெளியீட்டு விழாவில் ரோபோ ஷங்கர் மீது மைக் எரிந்ததை நினைத்து பார்த்திபன் மன்னிப்பு கேட்டிருந்தார். எல்லாமே ஒரு விளம்பரத்திற்காக பார்த்திபன் செய்த டைரக்சன் போலதான் தெரிகிறது.

Next Story

- Advertisement -