நடிகைகளால் வந்த பிரச்சனை.. இலவசமாக வந்த விளம்பரத்தால் கலக்கத்தில் பார்த்திபன்

பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் வித்தியாசமான முயற்சிக்காக பல பாராட்டுகளை பெற்று வருகிறது. அதே நேரத்தில் இந்த படம் தற்போது பல சர்ச்சைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கதைக்கு ஏற்ற ஒரு மோசமான காட்சி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

அந்த காட்சியில் பவி டீச்சர் என்று கொண்டாடப்படும் பிரகிடா நடித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் முக்கியமான ஒரு காட்சியில் நடித்திருந்தது சில விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அதாவது அந்த குறிப்பிட்ட காட்சியில் இறந்து போன தாயிடம் அம்மா இறந்துவிட்டார் என்று தெரியாமலே குழந்தை பால் குடிக்க முற்படும். இப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான காட்சியை வக்கிரம், கவர்ச்சி என்று சிலர் விமர்சனம் செய்து சர்ச்சையை கிளப்புகின்றனர்.

மேலும் நடிகை பிரிகிடா சேரி மக்கள் குறித்து பேசிய ஒரு பேச்சும் பல எதிர்வினைகளை ஏற்படுத்தியது. இதனால் அவரின் சார்பாக பார்த்திபன் மன்னிப்பு கேட்டிருந்தார். அந்தப் பிரச்சனை ஓய்வதற்குள்ளாகவே மற்றொரு நடிகையால் பார்த்திபனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்திருந்த ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதனுடன் நடுரோட்டில் சண்டைக்கு நின்று ஒட்டு மொத்த மீடியாவையும் அதிரவிட்டார். இதற்குப் பின்னால் பார்த்திபன் தான் இருக்கிறார் என்று தற்போது அனைத்து பழியும் அவர் மீது விழுந்துள்ளது.

இதனால் பார்த்திபன் அந்த நடிகைக்காக மீடியாவில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். தியேட்டரில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் பார்த்திபன் பலரின் பாராட்டுகளை பெற்று வந்தாலும் இது போன்ற அவமானங்களையும் சந்தித்து வருகிறார்.

படம் குறித்த அனைத்து விஷயங்களும் பாசிட்டிவாக சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி அசிங்கப்படுத்துவது நியாயமா என்று ஒரு புறம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மறுபுறம் இது பார்த்திபனுக்கு ஒரு இலவச விளம்பரம் தான் என்று கூறி வருகின்றனர்.

அதாவது பயில்வானுடன் நடிகை சண்டை போடும் போது பத்திரிக்கை நிருபர் அங்கே எப்படி சென்றார் என்ற ஒரு கேள்வியும் தற்போது எழுப்பப்படுகிறது. மேலும் பயில்வானுடன் சண்டை, ப்ளூ சட்டை மாறனுடன் சண்டை என்று இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்கான புது யுக்தியா என்றும் சிலர் கேட்டு வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் இந்த இலவச விளம்பரங்கள் அனைத்தும் பார்த்திபனுக்கு வரமா அல்லது சாபமா என்று தெரியவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்