சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அதே சந்தோசத்தை இன்று உணர்கிறேன்.. நினைத்ததை சாதித்து ஜெயித்த பார்த்திபன்

இயக்குனர் பார்த்திபன் வித்யாசமான கதைக்களத்தை மக்களுக்கு ரசிக்கும்படி திரைப்படத்தை வழங்குவதில் வல்லவர். ஆனால் இவரது வித்தியாசமான படைப்புகள் மக்களிடம் சென்று சேராது. உலகளவில் இவரது சினிமா பேசப்பட்டாலும் மக்களுக்கு பிடித்ததுபோல் இருப்பது கொஞ்சம் குறைவு.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் கமர்சியல் ரீதியான திரைப்படங்களை உருவாக்கி மிகப்பெரிய வெற்றிகளை கண்டவர். அதற்கு எடுத்துக்காட்டாக புதியபாதை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே என்று நிறைய வெற்றித் திரைப்படங்களில் கொடுத்தவர்.

பார்த்திபன் சினிமாவின் மீது உள்ள மோகத்தினால் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்ல ஆசைப்பட்டு பல திரைப்படங்களை வித்தியாசமான கதை களத்தில் உருவாக்கினார். இதனால் இவர் பல வெற்றிகளை பெற முடியவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்பு எடுத்த ஒத்த செருப்பு என்ற திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. சில விருதுகளையும் வாங்கியது. மக்கள் மத்தியில் சென்றடையவில்லை. இந்த படத்தினை இந்தியில் ரீமேக் செய்து முடித்து விட்டார். இதனை ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப் போகிறார்கள் என்று பேசப்படுகிறது.

இதனை தொடர்ந்து இரவின் நிழல் என்ற திரைப்படத்தை தொடங்கி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற வித்தியாசமான சில விஷயங்களை வைத்து உருவாக்கினார். உலக சினிமா போற்றும் விதத்தில் படம் அமைந்தது. இதற்கு மாறாக மக்களும் இந்த படத்தினை ஏற்றுக்கொண்டனர். படமும் வெற்றி பெற்று வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பார்த்திபன் புதிய பாதை என்ற படத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி போல் நான் உணருகிறேன் என்று கூறினார்.

இந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய போட்டி போட்டு கேட்கின்றனர். இதனை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப் போவதாக அறிவித்திருந்தார் பார்த்திபன். அவர் நினைத்தது போல் தமிழ் சினிமாவை உலகத்தரத்தில் எடுத்து உலகமே பேசும் வண்ணம் வெற்றி பெற்றுவிட்டார். இனிமேல் பார்த்திபன் கமர்சியல், வித்தியாசமான கதை களம் இரண்டையும் சேர்த்து வசூலையும் பெறப் போகிறார்.

- Advertisement -

Trending News