பாண்டியா சகோதரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வுக்குழு.. விஸ்வரூபம் எடுக்கப் போகும் புதிய ஆல்ரவுண்டர்!

2021ஆம் ஆண்டு, 20 ஓவர் உலக கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியது இந்திய அணி. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடந்த போட்டியில் தோல்வியைத் தழுவியது, இந்திய அணிக்குள் பல மாற்றங்களை உருவாக்கி வருகிறது .

ஏற்கனவே உலக கோப்பை போட்டிகளுக்கு பின் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக விராட்கோலி தெரிவித்திருந்தார். தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து நடக்கவிருக்கிறது. அதற்காக இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரோஹித், தலைமையின் கீழ் நடக்கவிருக்கும் நியூசிலாந்து தொடரில் ஆட விருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்திய அணியில் கடும் பேசுபொருளாக இருப்பது ஹர்திக் பாண்டியாவின் இடம். மேலும் பாண்டியா ஆல்ரவுண்டர் என்ற காரணத்தினாலேயே அணியில் விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி சமீபகாலமாக பாண்டியா பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அதேபோல் அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாக பந்துவீசும் இல்லை. அதனால் நியூசிலாந்து தொடரில் இருந்து அதிரடியாக ஹர்திக் பாண்டியாவை நீக்கியது தேர்வுக்குழு.

பாண்டியாவின் இடத்தை பூர்த்தி செய்வதற்காக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் ஐயர் என்னும் ஆல்ரவுண்டரை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. நியூசிலாந்து தொடரில் ஹார்திக் பாண்டியா மட்டுமின்றி அவருடைய சகோதரர் க்ருனால் பாண்டியாவிற்கும் கல்தா கொடுத்துள்ளது தேர்வுக்குழு.

Venkatesh-Iyer-Cinemapettai.jpg
Venkatesh-Iyer-Cinemapettai.jpg
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்