அதிமுகவிற்கு அடையாளம் கொடுத்த நடிகர் பாண்டு.. 220 கம்பெனிகளின் வெற்றி ரகசியம்

1987ஆம் ஆண்டு என்னுயிர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பாண்டு. இப்படம் மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடியது. பாண்டு நடிப்பைத் தாண்டி ஓவியம் வரைவதில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

பாண்டு ஓவிய படிப்பு படிப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். ஆனால் மற்ற படிப்பு போல் ஒரு வருடம் இரு வருடம் படிப்பு கிடையாது. ஓவியம் டிப்ளமோ படிப்பு 5 வருடம் படிக்க வேண்டும். அதனால் பாண்டு 5 வருடம் படித்தால் டாக்டர் ஆகி விடலாம் ஓவியத்திற்கு இவ்வளவு ஆண்டுகள் படிப்பதா என யோசித்து உள்ளார்.

ஆனால் அதன் பிறகு தென்னிந்தியாவில் ஓவிய படிப்பிற்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதால் படிப்பிற்காக பரோடாவிற்கு சென்றுள்ளார். மேற்படிப்பிற்கு அகமதாபாத் சென்றுள்ளார். அதன்பிறகு பிரான்சில் பெயிண்டிங்கில் டாக்டர் பட்டம் படித்துள்ளார். தென்னிந்தியாவிலேயே ஓவியத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றது பாண்டு மட்டும் தான்.

pandu
pandu

1967 ஆம் ஆண்டு முதல் முறையாக பாண்டு எம்ஜிஆரை சந்தித்துள்ளார். அப்போது எம்ஜிஆர் நான் ஒரு தனிக் கட்சி ஆரம்பிக்க போகிறேன் எனது கட்சிக்கு கொடி மற்றும் சின்னம் வரைய வேண்டும் என கூறியுள்ளார்.

pandu
pandu

அதன்பிறகு பாண்டு அதிமுகவின் கொடியையும் மற்றும் இரட்டை இலை சின்னத்தையும் வரைந்து கொடுத்துள்ளார். இது எம்ஜிஆருக்கு பிடித்துப்போக இதுவே அதிமுகவின் கட்சிக்கு அடையாளமாக மாறியது.

ஆனால் கட்சிக்காக ஓவியம் மட்டும்தான் வரைந்து கொடுத்தேனே தவிர எந்த ஒரு கட்சியிலும் நான் சேரவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அதிமுக கட்சியில் சாதாரண உறுப்பினர் அட்டையை கூட நான் வாங்கிக் கொள்ளவில்லை என கூறினார். அதற்கு காரணம் அரசியல் விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சன் டிவியின் லோகோ, தமிழ்நாடு டூரிசம் லோகோ போன்று கிட்டத்தட்ட 220க்கு மேல் வரைந்து கொடுத்துள்ளார். இவர் வரைந்து கொடுத்த அனைத்து லோகோவும் கம்பெனியும் மிகப்பெரிய உயரத்தில் எட்டி உள்ளது.

அதற்கு காரணம் இவர் ஒருவருக்கு ஓவியம் வரைவதாக இருந்தாள் பிரம்மமுகுர்தம் நேரத்தில் மட்டும் தான் வரை வேன் என்றும் அப்படி தாமதமாகி விட்டால் அடுத்த நாள் இதே நேரத்தில் வரைவேன் என கூறியுள்ளார்.

இப்படி இவர் வரைந்து கொடுத்த அனைத்து லோகோ கம்பெனிகள் எல்லாம் பெரும் உயரத்தை தொட்டதாக கூறியுள்ளார் அதற்கு காரணம் இதுதான் என்று  தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்