போட்டிக்கு முன்னரே நாங்கதான் என மார்தட்டும் பாகிஸ்தான்.. சபாஷ்! பேசியே ஜெயித்து விட்டார் புலிகேசி

நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் நடக்கும் போட்டிகள் என்றால் அது ஐசிசியினால் நடத்தப்படும் போட்டியாக தான் இருக்கும். ஏனென்றால் இவ்விரு நாடுகளும் தற்போது வரை எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் செயல்படுகிறது.

உலக கோப்பை தொடர்களில் இதுவரை பாகிஸ்தான் அணி இந்திய அணியை வென்றதில்லை. அதேபோல் 20 ஓவர் உலகக் கோப்பையிலும் பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் மோதி தோல்வியடைந்துள்ளது. ஆகையால் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தோடு பாகிஸ்தான் அணி களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Players-Cinemapettai.jpg
Players-Cinemapettai.jpg

போட்டி ஒருபுறம் இருக்கையில் ,பாகிஸ்தான் அணியோ நாங்கள்தான் இந்தியாவைவிட எல்லா விதத்திலும் தகுதியாக உள்ளோம், வெற்றி எங்களுக்கே என்று வாய் சவடால் பேசி வருகிறது. அவர்கள் தங்கள் அணியில் உள்ள நான்கு வீரர்களை, மலைபோல் நம்பி இவ்வாறு பேசி வருகின்றனர்.

பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சோயப் மாலிக், முகமது ஹபீஸ், சகீன் அஃப்ரிடி போன்ற வீரர்கள் எங்களிடம் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இவர்கள் எப்பொழுதுமே இந்தியாவிற்கு எதிராக திறம்பட செயல்படக்கூடியவர்கள், ஆகையால் இந்திய அணியை நாங்கள் எளிதாக வென்று விடுவோம் என்று முன்னணி வீரர்கள் பலர் போட்டியின் முடிவை இப்போதே கணித்துள்ளனர்.

இதற்கு ரசிகர்கள் இதுவரை நீங்கள் புடுங்கிய ஆணி எல்லாம் தேவையில்லாதது என்றும், களத்தில் வந்து சாதித்துக்காட்டுங்கள் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்