பிரபல தெலுங்கு நடிகையான சோனியா தீப்தி கார்த்தி நடித்த பையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இனிது இனிது என்ற கல்லூரி கலாட்டா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவரை லிங்குசாமி பையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார். கார்த்தியின் தோழியாக பையா படத்தில் அனைவராலும் கவரப்பட்டார்.
குறிப்பாக அவரைப்போல் ஒரு சுருட்டை முடி கேர்ள் பிரண்ட் நமக்கு இல்லையே என ஏங்கிய ரசிகர்கள் பலர். அதனைத் தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படங்களிலும் கன்னட படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆனால் நினைத்த அளவுக்கு அவரால் சிறப்பான கதாநாயகியாக வலம் வர முடியவில்லை. இருந்தாலும் தற்போது வரை முயற்சியையும் கைவிடவில்லை. கடைசியாக சோனியா தீப்தி நடிப்பில் வெளியான தமிழ் படம் புரியாத புதிர் படம் தான்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் தற்போது சின்ன சின்ன ஷார்ட் பிலிம்ஸ் மற்றும் மியூசிக் வீடியோ போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
தற்போது 36 வயதை கடந்துள்ள சோனியா தீப்தி சமீபத்தில் ஒரு மாடர்ன் உடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.