10 படம் நடிச்ச நடிகைக்கு பத்மஸ்ரீ விருதா.? 40 படம் இயக்கிய பெண்ணுக்காக கொந்தளித்த விஜய்யின் அம்மா

ஒன்றிய அரசின் பாகுபாடு குறித்து நம் தமிழக அரசியல்வாதிகள் பல நேரம் கொந்தளித்து பேசிவருவது வழக்கமான ஒன்று தான். இதற்கான காரணம் வட இந்தியாவில் கொடுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை காட்டிலும் தென்னிந்திய மாநிலங்களுக்கு சற்று குறைவு தான். இது ஒருபுறம் இருக்க தற்போது சினிமா தொழில் வரை ஒன்றிய அரசின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

வட இந்திய படங்களின் ப்ரோமோஷன்கள் இந்தியா முழுதும் நடைபெற்றாலும், தென்னிந்திய படங்களின் ப்ரோமோஷன்கள் அந்தந்த மாநிலங்களோடு முடிந்து விடுகிறது. இதனிடையே விருதுகள் கொடுப்பதில் கூட ஒன்றிய அரசு அவ்வப்போது ஓரவஞ்சனை காட்டி வருவதாக திரைத்துறையினர் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் ஹிந்தி நடிகை கங்கனா ராணாவதிற்கு 2020 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்தது.

Also Read : பொன்னியின் செல்வனை மிஞ்சிய கெட்டப்பில் கங்கனா ரனாவத்.. சந்திரமுகியாக வாங்கிய சம்பளம்

இதுகுறித்து நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவரவுள்ள வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ள பிரபல நடிகை ஜெயசுதா, கங்கனாவுக்கு வழங்கப்பட்ட விருது குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். நடிகை கங்கனா திறமையான நல்ல நடிகை. ஆனால் அவர் நடித்த 10 படங்களுக்காக பத்மஸ்ரீ விருது வழ்ங்கியுள்ளது ஒன்றிய அரசு.

ஆனால் 44 தெலுங்கு படங்களை 70 காலக்கட்டத்திலிருந்து 80 காலகட்டம் வரை தனி பெண்ணாக இயக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற நடிகை விஜய நிர்மலாவை , ஏன் ஒன்றிய அரசு கவுரவிக்கவில்லை என ஜெயசுதா கேள்வி கேட்டுள்ளார். நடிகை விஜய நிர்மலா 1950 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மச்ச ரேகை திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

Also Read : இந்திய சினிமா வரலாற்றில் அதிக விருது வாங்கிய நடிகர்.. கமலையே திகைக்க வைத்த ஜாம்பவான்

படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் 1973 ஆம் ஆண்டு மீனா என்ற தெலுங்கு படத்தை முதன்முதலில் இயக்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 44 படங்களை தனி பெண்ணாக இயக்கினார். உலகிலேயே அதிக படங்களை இயக்கிய முதல் பெண் இயக்குனர் என்ற கின்னஸ் சாதனையையும் பெற்றார் விஜய நிர்மலா. மேலும் விஜய கிருஷ்ணா மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்து பல படங்களை தயாரித்துள்ளார்.

அப்படி பல சாதனைகளை படைத்த இவருக்கு ஒன்றிய அரசு சார்பில் எந்த ஒரு அங்கீகாரமும் விருதுகளும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படவில்லை . மேலும் தென்னிந்திய சினிமாவை ஒன்றிய அரசு ஒருபோதும் கண்டுக்கொள்ளவில்லை என்று நடிகை ஜெயசுதா வருத்தடன் தெரிவித்துள்ளார். இவருக்கு ஆதரவாக தற்போது தென்னிந்திய ரசிகர்கள் இணையத்தில் கமெண்டுகளை கூறி வருகின்றனர்.

Also Read : ஒவ்வொரு பாடலும் வேற லெவல்.. இணையதளத்தை திணறடிக்கும் வாரிசு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்