கே ஜி எஃப்-ஐ காப்பியடிக்கும் பா ரஞ்சித்.. என்னதான் கஷ்டப்பட்டு எடுத்தாலும் அந்த இரண்டு பட சாயலில் இருக்கும் தங்கலான்

பா ரஞ்சித் படங்கள் என்றாலே கருத்துள்ள படமாகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான விழிப்புணர்வு படமாகவும் அவருடைய கருத்துக்களை படங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் இவருடைய முக்கிய பங்காக இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சர்பட்டா பரம்பரை போன்ற படங்களின் மூலம் வெற்றி இயக்குனராக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இதனை அடுத்து தற்போது விக்ரம் நடிப்பில் இவர் இயக்கிக் கொண்டிருக்கும் தங்கலான் படம் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இது சம்பந்தமாக பா ரஞ்சித் சின்ன மேக்கிங் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது யாரும் நினைக்காத அளவிற்கு மிக பிரம்மாண்டமாகவும் வித்தியாசமாகவும் எடுத்து இருக்கிறார் என்று தெரிகிறது.

Also read: விக்ரம் உயிரைக் கொடுத்து நடித்து வெற்றி கண்ட 5 படங்கள்.. வேற லெவலில் உருவாகி இருக்கும் தங்கலான்

ஆனால் கொஞ்சம் பாலா இயக்கிய பரதேசி படம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. அவர் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய வேறு ஊரில் இருந்து கஷ்டப்படும் மக்களை அழைத்து வந்து அடிமையாக்குவார்கள். இதை யாராலும் கேள்வி கேட்க முடியாத மாதிரி பரதேசி படம் அமைந்திருக்கும். அதே மாதிரி தங்கலான் படத்தில் தேயிலைத் தோட்டத்திற்கு பதிலாக தங்க குகையில் வேலை செய்ய வறுமையில் வாடும் மக்களை அழைத்துச் சென்று அவர்களை கஷ்டப்படுத்துவார்கள்.

இதைப் பார்த்து அவர்களுக்காக போராடும் நபராக விக்ரம் நடித்திருக்கிறார். இதுதான் பரதேசி படத்துக்கும் தங்கலான் படத்திற்கும் வித்தியாசம் தவிர மற்றபடி அந்தப் படத்தைப் போலவே அச்சு அசலாக காப்பி எடுத்து இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய பிரமாண்ட படமான கேஜிஎஃப் படத்தின் கதையும் இதில் இருப்பது போல் தெரிகிறது. ஆக மொத்தத்தில் தங்கலான் படத்தை பார்த்தால் நமக்கு புதுசா பார்க்கிற மாதிரி இருக்காது என்று தெரிகிறது.

Also read: மருதநாயகத்தை மிஞ்சிய விக்ரமின் தங்கலான் வீடியோ.. காட்டுவாசியாக வேட்டையாட வைத்த பா ரஞ்சித்

பொதுவாகவே பா ரஞ்சித் யாருடைய படத்தையும் காப்பி அடித்து எடுக்க மாட்டார். ஆனால் இப்பொழுது வந்த டீசரை பார்க்கும் பொழுது ஏற்கனவே பார்த்த படத்தின் கதை போல்தான் தெரிகிறது என்று தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து அடுத்த ட்ரெய்லர் வரும்போது தான் புரியும்.

மேலும் விக்ரம் இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று முழுமையாக நம்புகிறார். ஏனென்றால் இந்த படத்திற்காக அதிக அளவில் மெனக்கெடு செய்து நடித்து வருகிறார். அதே மாதிரி விக்ரமின் ரசிகர்கள் கூட இந்த டீசரை வைத்து எதையும் முடிவு செய்ய வேண்டாம் கண்டிப்பாக பா ரஞ்சித் மற்ற படத்தை பார்த்து காப்பி அடிக்க மாட்டார் அதனால் டிரைலர் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று அவர்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Also read: பா ரஞ்சித் கொடுத்த தங்கலான் அப்டேட்.. சிங்கிளாக வசூல் வேட்டையாட வரும் விக்ரம்