என்கிட்டேயே வேலையை காட்றீங்களா? விஜய் டிவி வாலை ஒட்ட வெட்டிய ஓவியா

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

45 நாள் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிக் பாஸ் சீசன்களில் மிகவும் சுவாரசியமான போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் ஒடிடி யில் போட்டியில் கலந்துகொள்ள உள்ளார்கள்.

அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 1 இல் மிகவும் பிரபலமானவர் ஓவியா. இந்நிகழ்ச்சியில் அவர் எதார்த்தமாக இருந்ததும், பிரச்சனைகளை கையாள்வதும் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இந்நிகழ்ச்சியில் இருந்து ஓவியாவுக்கு ஆர்மி தொடங்கப்பட்டது. பிக் பாஸ் சீசன் 1 இல் இருந்து ஓவியா பாதியிலேயே வெளியே வந்தாலும் ரசிகர்களின் பேவரைட் கன்டஸ்டன்ட் ஆக இருந்தார்.

அதன்பிறகு ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தாலும் ஒரு சில கவர்ச்சியான படங்களில் நடித்ததால் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. தற்போது பிக்பாஸ் ஒடிடியில் கலந்து கொள்கிறார் ஓவியா. ஆனால் பிக் பாஸ் ஒடிடியின் புரோமோவில் ஓவியாவை காட்டப்படவில்லை.

இதனால் கோபம் அடைந்த ஓவியா தனக்கு உடம்பு சரியில்லை என பல்வேறு காரணங்களை கூறி பிக்பாஸ் ஒடிடியில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். ஓவியா பங்கு பெற்றால் தான் பிக் பாஸ் இன் டிஆர்பி எகிறும் என்பதால் விஜய் டிவி என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளது.

இதனால் விஜய் டிவி ஓவியாவிடம் சமரசம் பேசி வருகிறார்கள். ஆனால் ஓவியா இதற்கு சம்மதித்து பிக் பாஸ் இன் ஓடிடியில் கலந்து கொள்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்