எலும்பும் தோலுமாக மாறிய பிக்பாஸ் ஓவியா.. சரக்கு, தம்மு கம்மி பண்ணுங்க என கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மலையாள நடிகையான ஓவியா தமிழில் களவாணி படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படம் மட்டுமே இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், ஏனோ தெரியவில்லை இவரால் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பெற முடியவில்லை.

சரியான படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த நிலையில் தான் இவருக்கு அதிர்ஷ்டம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக வந்தது. தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஓவியா கலந்துகொண்டார். அந்த சீசனில் ஓவியாவிற்கு இருந்த அளவிற்கு வேறு யாருக்கும் ரசிகர்களே இல்லை. அந்த அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

ஓவியாவுக்காக ஓவியா ஆர்மி என்ற ஆர்மியையே ரசிகர்கள் உருவாக்கினர். அந்த அளவிற்கு இவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தனர். பிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்ற ஓவியா அதை சரியான வழியில் பயன்படுத்த தவறிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படங்களில் ஓவியா நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் வெற்றியடையவில்லை. தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

oviya
oviya

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். ஏற்கனவே ஒல்லியாக இருந்த ஓவியா தற்போது குச்சி போல் மாறி இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

oviya
oviya

எனவே புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதல்ல நல்லா சாப்பிடுங்க கொஞ்சம் எடை போடுங்க என ஓவியாவுக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். இதைத் தவிர தம்மு, சரக்கு போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள் என்பது போன்றும் பாசமுள்ள ஓவியா ஆர்மி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -